கனிந்தது காதல் - நடிகை ஷம்முவை மணக்கிறார் நடிகர் பரத்!

By Shankar

நடிகை ஷம்மு - நடிகர் பரத் காதல் ஒருவழியாக உண்மை எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் காதல் திருமணப் பேச்சு வரை போயிருக்கிறது.

பரத்துக்கும் ஷம்முவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருக்கிறது. விரைவில் அதுகுறித்து அறிவிக்கப் போவதாக பரத் தரப்பில் கூறுககின்றனர்.

திருமண அறிவிப்பு

திருமண அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக பிரமச்சாரியாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் பரத். சமீபத்தில் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.

ஷம்முவுடன் காதல்...

ஷம்முவுடன் காதல்...

அவர் நடிகை ஷம்முவை விரும்புவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்வார் என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது. விசாரித்ததில் அதுதான் உண்மை என்பது தெரிய வந்துள்ளது.

ப்ரியதர்ஷன் அறிமுகம்

ப்ரியதர்ஷன் அறிமுகம்

ஷம்மு அமெரிக்காவில் செட்டிலானவர். காஞ்சிவரம் படத்தில் படத்தில் ப்ரியதர்ஷன் - பிரகாஷ்ராஜால் அறிமுகம் செய்யப்பட்டவர். அதன்பிறகு தமிழில் மலையன், பாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பரத்துடன் கண்டேன் காதல் படத்தில் இரு காட்சிகளில் மட்டும் தோன்றுவார் ஷம்மு.

பற்றிக் கொண்ட காதல்

பற்றிக் கொண்ட காதல்

அப்படி இரண்டே சீன்களில் வந்தாலும், பரத்துடன் நடித்தபோது காதல் தொற்றிக் கொண்டதாம். பின்னர், ஷம்முவுக்கு படவாய்ப்பு இல்லாமல் போகவே, அமெரிக்காவுக்கு பறந்தார். அவருடைய பெற்றோர் அங்குதான் வசிக்கிறார்கள். அமெரிக்கா போன பின் பரத்துடனான காதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

அண்ணி..

அண்ணி..

இந்நிலையில், பரத் திருமணப் பேச்சை ஆரம்பித்தார். மணப்பெண் குறித்து அவர் சொல்லாவிட்டாலும், அவரைச் சுற்றியிருப்பவர்கள் ஷம்முதான் மணப் பெண் என்று உறுதிப்படுத்தினர். பரத் நண்பர்கள் ஷம்முவை அண்ணி என அழைப்பது வழக்கம்.

பெற்றோர் சம்மதம்

பெற்றோர் சம்மதம்

ஷம்மு நெய்வேலியைச் சேர்ந்தவர். ஆனால் பிறந்தது ராஜஸ்தானில் உள்ள பிகானீர் நகரில். அங்கிருந்து அமெரிக்கா போய் செட்டிலான குடும்பம் அவருடையது. பரத் சென்னை வாழ் தமிழர். இரு குடும்பத்தினரும் சம்மதித்து இந்தத் திருமணத்தை நடத்தவிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X