வெட்டிக் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் நடிகர் பரத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா? அவரே சொல்றாரேப்பா!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் கே. ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை, பெரம்பூர் பகுதியில் அவர் கட்டி வந்த புதிய வீட்டின் கட்டிடத்தின் முன்னாலே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பான வழக்கு விசாரணையை காவல்துறை செய்து வருகிறார்கள். இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று அதாவது ஜூலை 5 ஆம் தேதி, புறநகர் சென்னையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள், ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள், நண்பர்கள், அவரது தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் நடிகர் பரத் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் நாளில் ஆம்ஸ்ட்ராங் உடனான அவரது நினைவுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் அவருக்கும் இடையிலான உறவு குறித்து தெரிவித்துள்ளார்.
" இந்த பதிவை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் அண்ணன் குறித்து சொல்ல வேண்டும் என்றால், அவருடன் எனக்கு பல நினைவுகள் உள்ளது. முதன் முதலாக நான் ஆம்ஸ்ட்ராங் அண்ணனை சந்தித்தது நண்பன் சிவா மூலமாகத்தான். அங்கிருந்து தொடங்கிய அண்ணனுடனான நட்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத நட்பு. அவரிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிள்ஸ் என்னவென்றால், அவர் தராதரம் பார்த்து யாரிடமும் பழக மாட்டார்.

அவரது சிரிப்பு: எல்லோரிடமும் அன்பாகவும் அரவணைப்போடும் இருப்பார். அண்ணனின் சிரிப்பு, எல்லோரையும் அந்த சிரிப்புடன் அணுகக்கூடிய அந்த சிரிப்பை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன். ஜிம்மிற்கு சென்று நான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது எல்லாம், சிவாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன், அண்ணா இங்குதானே பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். இங்குதானே வொர்க்-அவுட் செய்வார் என்று சொல்லிக் கொண்டு இருப்பேன். இதுபோல பல நினைவுகள் இருக்கிறது.
பாரம்: அண்ணன் வீட்டுக்குப் போயுள்ளேன். அண்ணி கையால் சாப்பிட்டுள்ளேன். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது ஒரு வருடம் இவ்வளவு வேகமாக சென்றுவிட்டதா என பாரமாக உள்ளது. அண்ணனுடன் நான் இருந்த நினைவுகள் அனைத்தும் இப்போதும் மிகவும் பசுமையாக உள்ளது. அண்ணி, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நீங்கள் கவலைப் படவேண்டாம். நாங்கள் உங்களை எப்போதும் மிஸ் செய்வோம் அண்ணா. நீங்கள் எப்போதும் எங்களுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் அண்ணா" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வழக்கு நிலை: கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை தமிழ்நாடு காவல்துறை தரப்பில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆண்டு ஆகியும் விசாரணை இன்னும் முடியவில்லை. மேலும் கொலையாளிகள் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல என்ன காரணம் என்பதும் இதுவரை பதில் தெரியாத கேள்வியாக உள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் தரப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆம்ஸ்ட்ராங்கின் 9 அடி உருவச்சிலை திறக்கப்பட்டது. மேலும், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற கட்சியை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











