எளிமையாக திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகர்.. வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள்!
சென்னை : தமிழில் பல்வேறு திரைப்படங்களிலும் அதேசமயம் ஆணழகன் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றதோடு பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் பரத் ராஜ்.
பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
லாக் டவுனிலும் பல திரைப்பிரபலங்கள் தங்களது திருமணங்களை உறவினர்களின் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் வரும் நிலையில் தமிழ் நடிகர் பரத் ராஜ் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

பிரம்மாண்டமான முறையில்
பொதுவாக திரைப் பிரபலங்களின் திருமணங்கள் கோலாகலமாக மிக பிரம்மாண்டமான முறையில் பல்வேறு திரை பிரபலங்களின் முன்னிலையில் ஆசீர்வாதங்களுடன் நடைபெற்று வந்த நிலையில், தற்போது உள்ள கொரானா ஊரடங்கு காரணமாக பல திரை பிரபலங்களும் தங்களது திருமணங்களை மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் செய்து வருகின்றனர்.

மிகக்குறைவான பங்கேற்பாளர்களுடன்
அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ராணாவின் திருமணமும், நடிகர் நிதின்னின் திருமணமும் மிகக்குறைவான பங்கேற்பாளர்களுடன் அவரவர் வீடுகளிலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. மேலும் திருமணத்திற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் திருமண ஜோடிக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

நடிகர் பரத் ராஜ்
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக வெளியான "அடங்கமறு"திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல நடிகரான பரத் ராஜ், தற்பொழுது எளிமையான முறையில் திருமணம் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

சுவாதி என்பவரை திருமணம்
கட்டுடல் மேனியுடன் பல்வேறு ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாடலிங் துறையில் கலக்கி வந்ததுடன் இப்பொழுது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகர் பரத் ராஜ், சுவாதி என்பவரை குடும்பத்தாரின் முன்னிலையில் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பரத்ராஜிக்கு பல்வேறு திரை பிரபலங்களும் ரசிகர்களும் நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











