மே 25ல் வெளியாகிறது பொட்டு... வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் பரத்!
நடிகர் பரத் கதாநாயகனாக நடித்துள்ள பொட்டு படம் மே 25ம் தேதி திரைக்கு வருகிறது.
சென்னை: நடிகர் பரத் கதாநாயகனாக நடித்துள்ள பொட்டு திரைப்படம் மே 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் " பொட்டு".

நடிகர் பரத் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, ராகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். இப்படம் மே 25 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பரத் ஹீரோவாக நடித்த எந்தப்படமும் வெற்றி பெறவில்லை. இதனால் அவரது மார்க்கெட் நிலவரம் மிக மோசமாக உள்ளது. எனவே தான் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி நடிகர் பரத் பேய் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே அவரது மார்க்கெட் நிலவரம் மாறும். அதனால் படம் ரிலீசை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார் நடிகர் பரத்.



Click it and Unblock the Notifications











