வட மாநில மக்கள் பாவம்.. அந்த வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது.. நடிகர் பரத்!

சென்னை: இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத் நடிப்பில் மே 17 ஆம் ஓடிடியில் வெளியான வெப் தொடர் தலைமைச்செயலகம். விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்று வரும் இத்தொடர் குறித்து பேசிய பரத், இந்த வெப் சீரிஸூக்காக மொத்த வட இந்தியாவுக்கும் நான் தான் சென்று வந்தேன். வட இந்தியாவை ஒப்பிடும்போது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை என பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலனின் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் வெப் தொடர் தலைமைச் செயலகம். அரசியல் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இரண்டு கதைகள் ஒரே நேர் கோட்டில் பயணிப்பது தான் இந்த சீரிஸின் மையக்கரு. அதாவது ஜார்கண்ட் மாநிலத்தில் திருட்டு பட்டம் கட்டப்படும் பெண் ஒருவரை கிராமத்தினர் கொடூரமாக தாக்குகின்றனர். அதன் இறுதியில் அப்பெண் ஆவேசமாக அனைவரையும் வெட்டி சாய்க்கிறார். இதைத்தொடர்ந்து காணாமல் போகும் அவரை காவல்துறை பதினைந்து வருடங்களாக தேடி வருகிறது என்பதை நோக்கி கதை நகர்கிறது.

Actor Bharath talks about his experience of acting in thalaimai seyalagam web series

தலைமைச்செயலகம்: மொத்தம் 8 எபிசோடுகள். கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் இந்த தொடரில், கிஷோர், ரம்யா நம்பீசன், நிரூப் நந்தகுமார், ஸ்ரேயா ரெட்டி, பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரில் நடித்தது குறித்து பேசிய பரத். வசந்தபாலனுக்கும் எனக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கு, வெயில் படத்திற்கு பிறகு அரவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பேன். நானும் அவரும் நல்ல நண்பர்கள் தொடர்ந்து அவருடன் சினிமா பற்றி பேசிக்கொண்டு தான் இருப்போம். தயாரிப்பாளர் பணம் தருகிறார் என்பதற்காக வருடத்திற்கு இரண்டு படம் தருவதை வசந்தபாலன் என்னைக்கும் விரும்ப மாட்டார். அவருக்கு தகுந்தாற் போல, கதை அமைய வேண்டும், அதற்கு தகுந்த நடிகர், நடிகைகள் அமைந்தால் மட்டும் தான் ஒரு படத்தை இயக்குவார்.

வட இந்தியா முழுவதும் சென்றேன்: தொடர்ந்து பேசிய பரத், தலைமைச்செயலகம், வெப் சீரிஸூக்காக வட இந்தியா மொத்தமும், நான் தான் சென்று வந்து இருக்கிறேன். மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்டில் வாழும் மக்களின் வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது. அவர்கள் ஏழ்மையின் உச்சத்தில் இருக்கிறார்கள். கொல்கத்தாவின் ஒரு பகுதி மட்டும் நன்றாக வளர்ந்து உள்ளது. ஆனால் கொல்கத்தாவின் மறுபக்கம் ரொம்ப மோசமாக இருக்கிறது. அதையெல்லாம் ஒப்பிடும்போது தமிழ்நாடு எவ்வளவு நல்ல நாடு என்பதை புரியவைக்கிறது.

நம்மால் வாழமுடியாது: மேலும், அந்த மாநிலத்தில், குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல், அங்குள்ள சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். ஒரு அம்மா குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டு தான் சுரங்கத்தில் வேலை செய்தார். ஒரு டாக்டர் பெட்ரோல் பங்க் முன்னாடி டேபிள் போட்டு உட்கார்ந்து கொண்டு வைத்தியம் பார்க்கிறார். அங்கு இருக்கும் மக்கள் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ பழகிவிட்டார்கள். அந்த வெப் தொடரில் பார்த்த பல இடங்கள் நேரடியாக அங்கே சென்று படமாக்கினோம் என்று பரத் அந்த பேட்டியில் பல விஷயத்தை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X