twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் ஏமாத்துனாலும்.. தொடர்ந்து ‘சித்தப்பு’வை கௌரவிக்கும் தமிழக அரசு.. சரவணன் ஹேப்பி அண்ணாச்சி!

    நடிகர் சரவணனுக்கு தமிழ் திரைப்பட மானியத் தேர்வுக்குழுவில் உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

    |

    Recommended Video

    நடிகர் சரவணனின் குணம் பற்றி இயக்குநர் ரமேஷ்கண்ணா - வீடியோ

    சென்னை: பிக் பாஸ் புகழ் நடிகர் சரவணனுக்கு தமிழ் திரைப்பட மானியத் தேர்வுக்குழுவில் உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

    80, 90 களில் தமிழில் வெற்றிப்பட நாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். அதனைத் தொடர்ந்து நந்தா, பருத்தி வீரன் போன்ற படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

    பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட சரவணன், தனது கல்லூரிக் காலத்தில் பெண்களிடம் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதை வெளிப்படையாகக் கூறியதால் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் அவர்.

    மானியக் குழுவில் பதவி

    மானியக் குழுவில் பதவி

    மீண்டும் சரவணனை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூகவலைதளத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், மானியம் பெறத் தகுதியான தரமான நேரடித் தமிழ்த் திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் சரவணனையும் நியமித்துள்ளது தமிழக அரசு.

    தரமான படங்களுக்கு மானியம்

    தரமான படங்களுக்கு மானியம்

    ஒவ்வொரு ஆண்டும் தரமான நேரடித் தமிழ்த் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மானியமாக தலா ரூ.7,00,000 வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் குறைந்த செலவில் ஒரு படத்துக்கு 8 பிரதிகளிலிருந்து 25 பிரதிகள் வரை வெளியிடப்படும் படங்கள் தேர்வு செய்யப்படும்.

    புதிய திரைப்பட மானியத் தேர்வுக்குழு

    புதிய திரைப்பட மானியத் தேர்வுக்குழு

    ஒவ்வோர் ஆண்டும் ஒரு தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு, படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை வெளியான படங்களில் 149 படங்களைத் தேர்வுசெய்து தலா 7 லட்சம் வீதம் 10 கோடியே 43 லட்ச ரூபாய் கடந்தாண்டு வழங்கப்பட்டது. அந்த வகையில் 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் வெளியான படங்களைத் தேர்வு செய்வதற்காக புதிய `திரைப்பட மானியத் தேர்வுக்குழு'வை நியமித்தது தமிழக அரசு.

    உறுப்பினர் பதவி

    உறுப்பினர் பதவி

    இதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைவராகவும், உறுப்பினர்களாகத் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், வசனகர்த்தா லியாகத் அலிகான் மற்றும் நடிகர்கள் சிங்கமுத்து, சரவணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 35 மிமீ/சினிமாஸ்கோப்பில் 3000 மீட்டர் நீளத்துக்குக்குறையாமல் தயாரிக்கப்பட்டிருக்கும் படங்களே மேற்படி மானியம் பெறப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

    சரவணன் மகிழ்ச்சி

    சரவணன் மகிழ்ச்சி

    பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சில தினங்களிலேயே அவர் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். தற்போது திரைப்பட மானியத் தேர்வுக்குழுவில் அவருக்கு பதவி கிடைத்துள்ளது. தொடர்ந்து கிடைத்து வரும் அங்கீகாரங்களால் சரவணன் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். நேரிலும் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    English summary
    The Tamilnadu government had appointed actor Saravanan in the state substidy committe.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X