வாய்ப்பு கேட்டேன்.. ரொம்ப கஷ்டமா போச்சு.. அசிங்கப்படுத்தினாரா சிவகார்த்திகேயன்?.. பிரபல நடிகர் வேதனை

சென்னை: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இப்போது உச்சத்தில் இருக்கிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. இதுவரை 350 கோடி ரூபாய்வரை வசூலை நெருங்கியிருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல நடிகர் பிளாக் பாண்டி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார். அதன் காரணமாக இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுகிறார். இதனையடுத்து அந்த இடத்துக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கும் ஏற்பட்டது. சூழல் இப்படி இருக்க விஜய் கடைசியாக நடித்த GOAT படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்போது அவரிடம் விஜய், துப்பாக்கிய பிடிங்க சிவா; க்ரவுண்ட்ல இருக்க லட்சக்கணக்கான உயிர் இப்போ உங்க கைல என்று வசனம் பேசினார். அதனையடுத்து தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைத்துவிட்டார் என்று பலரும் பேசினார்கள்.

sivakarthikeyan black pandi amaran

அமரன் ரிலீஸ்: அதற்கு பிறகு அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்று அவரது ரசிகர்கள் கூறினார்கள். அதற்கு தகுந்தாற்போல்தான் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் அமைந்தது. விமர்சன ரீதியாக படம் ஏகத்துக்கும் கொண்டாடப்பட்டது. அதேபோல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. இதுவரை 350 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எஸ்கே இனி 300 கோடி க்ளப் ஹீரோ என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

அடுத்த படங்கள்: அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு, வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் என படுபிஸியாக இருக்கிறார். அதுமட்டுமின்றி படங்களையும் தயாரித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் கொட்டுக்காளி திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

சம்பளத்தை உயர்த்திய சிவா: சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான மெரினா படத்தில் அவருக்கான சம்பளம் பத்தாயிரம் ரூபாய். இப்போது அமரனுக்கு அவர் வாங்கியிருப்பதாக கூறப்படும் சம்பளம் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய். மேலும் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை 25 கோடி ரூபாயிலிருந்து 50 கோடி ரூபாய்வரை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மற்ற மொழிகளிலும் சிவாவுக்கான மார்க்கெட் அமரன் படத்தின் மூலம் ஓபன் ஆகிவிட்டதாக தெரிகிறது.

பிளாக் பாண்டி பேட்டி: இப்படி சிவகார்த்திகேயன் மென்மேலும் வளர்ந்துகொண்டே செல்கிறார். ஆனால் அவரை சுற்றி சில சர்ச்சைகள் சமீபத்தில் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. முதலில் டி.இமான் பஞ்சாயத்து ஆரம்பித்தது. அதற்கு பிறகு கொட்டுக்காளி பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவரது பேச்சு தனுஷை அட்டாக் செய்தது என்ற சர்ச்சை வெடித்தது. சூழல் இப்படி இருக்க பிரபல நடிகர் பிளாக் பாண்டி சிவகார்த்திகேயன் பற்றி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருமுறை நடிகர் சங்கத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்தேன். ஏற்கனவே அவருடன் பழக்கம் இருந்ததால், 'சிவா உன்னிடம் பேச வேண்டும்' என்று சொன்னேன். அதனையடுத்து அவரது மேனேஜர் வந்து என்னிடம் 20,000 ரூபாய் பணத்தை கொடுத்தார். அதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அப்போது எனது அம்மாவும் இருந்தார். உடனே அவரிடம் எனது அம்மா, 'தம்பி அவர் நடிக்கும் படங்களில் இவருக்கு வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள். பணம் வேண்டாம்' என்று சொன்னார்.

நானும் அவரிடம், 'நீங்கள் இப்போது கொடுக்கும் 20,000 ரூபாயோ இல்லை 50,000 ரூபாயோ தீர்ந்துவிடும். எனக்கு கை, கால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்ளலாம். நான் அவரிடம் பேச வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என்று சொன்னேன். அவர் சென்று சிவகார்த்திகேயனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை; அதற்கு பிறகு சிவா என்னிடம் பேசவே இல்லை" என்றார். பிளாக் பாண்டி அங்காடித் தெரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X