இந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா

சென்னை: இந்தியன் 2 பாகத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை எதிர்க்கும் வில்லன் கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜிகர்தண்டா வில்லன் அசால்ட் சேது பாபி சிம்ஹா.

பிரம்மாண்டத்தின் மறு உருவமான டைரக்டர் ஷங்கரின் படைப்புகளில் ஒன்று 1997ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Actor Bobby Simha Acts in Indian 2

முதல் பாகத்தில் ஊழலைப் பற்றி பேசப்பட்டதால் இரண்டாம் பாகத்தில் அவர் எதை மையமாக வைத்து எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் அவலங்கள் குறித்து இந்தியன் 2 பாகத்தில் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படம் பெரும் பொருட் செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.

காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருவதால் அவர்களது காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அனிருத் இசையமைப்பில் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார் ரவி வர்மன்.

கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் வாரத்தில் 2 நாட்கள் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் எந்த ஒரு தடையும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக மிகவும் கவனத்துடன் அவருக்கு தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாய்ஸ், அந்நியன், சிவாஜி என ஷங்கரின் இயக்கத்தில் உருவான படங்களில் நடித்திருந்த விவேக் இந்திய 2 படத்திலும் நடிக்கிறார். கமல்-விவேக் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் விவேக் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இப்படி தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் வில்லன் கதாபாத்திரம் மட்டும் இதுவரையில் முடிவாகாமலேயே இருந்தது. பிரபல நடிகர் ஒருவர் கமல்ஹாசனை எதிர்த்து வில்லனாக நடிப்பார் என பேசப்பட்டு வந்தது. இதற்காக இந்தி முன்னணி நடிகர்களிடம் பேசப்பட்டாலும் ஜிகர்தண்டா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அசால்ட் சேதுவாக மிரட்டலுடன் நடித்த பாபி சிம்ஹா தான் கடைசியில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X