நானும் ஹீரோ கமலும் ஹீரோன்னு சொல்றதே தப்பு... அவர் ஒரு யுனிவர்சிட்டி... பதறிய பாபி சிம்ஹா!
சென்னை: கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
லைகா புரோடக்ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
இந்தியன் 2 படத்தில் நடிகர் பாபி சிம்ஹாவும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு பாபி சிம்ஹா கொடுத்த பேட்டியில் கமல்ஹாசன் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

சென்னையில் இந்தியன் 2 ஷூட்டிங்
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் தொடங்கிய படப்பிடிப்புக்காக கமல் மொத்தம் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஷெட்யூலில் கமலின் போர்ஷன்கள் முற்றிலுமாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அனுபவம் பகிர்ந்த பாபி சிம்ஹா
காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது வென்ற இவர் முதன்முறையாக கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாபி சிம்ஹா, கமல்ஹாசனை முதன்முறை நேரில் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

கமல் ஒரு யுனிவர்சிட்டி
தொடர்ந்து பேசியுள்ள அவர், கமல் சார் ஒரு யுனிவர்சிட்டி, அவர் போல ஒரு நடிகரை பாக்கவே முடியாது அவர் வேற லெவல் சொல்லப்போனா அவர்தான் சினிமா, நானும் ஹீரோ அவரும் ஹீரோன்னு சொல்றதே தப்பு, தான் பெரிய லிஜெண்ட் என்ற கர்வம் கூட இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக ஜாலியாக பேசுற நல்ல மனிதர் கமல் என கூறியுள்ளார்.

உலக நாயகனின் முதல் பாராட்டு
மேலும், சூது கவ்வும் பார்த்துட்டு எங்களை பாராட்டுவதற்காக அவரது ஆஃபிஸ்க்கு வர சொல்லியிருந்தார். கருணாகரனும் அசோக் செல்வனும தீவிர கமல் சார் வெறியர்கள், முதல்தடவை கமல் சாரை நேரில் பார்க்கும் போது அப்படி ஒரு ஈர்ப்பு, ஒளி, நம்பிக்கை. அப்போதுதான் எனக்கு தெரிஞ்சது அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று. சூது கவ்வும் படத்தில் எனது கேரக்டரின் பெயரை குறிப்பிட்டு நல்லா நடிச்சிருக்கீங்க என சொன்னதும் நான் அப்படியே நெகிழ்ந்துவிட்டேன் என பாபி சிம்ஹா பேசியுள்ளார். அவரது இந்த பேட்டியை கமல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











