பாபி சிம்ஹாவின் காரை பறிமுதல் செய்த போலீஸ்.. சுக்கு நூறாக நொறுங்கிய கார்.. 4 பேரின் நிலை மோசம்?

சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் பாபி சிம்ஹாவின் சொகுசு கார் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சென்னையின் முக்கிய பகுதியில் விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கார் விபத்தில் எத்தனை பேர் காயம் ஏற்பட்டிருக்கிறார்கள், எதனால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது என்பதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஜிகர்தண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தேசிய விருதை தட்டி சென்றவர் பாபி சிம்ஹா. இப்படத்தில் அசால்ட் சேது கதாப்பாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. பாபி சிம்ஹா கரியரிலும் முக்கிய படமாக இருந்தத. இப்படத்திற்கு முன்பு சிறு சிறு கதாப்பாத்திரங்களிலும், துணை நடிகராகவும் வலம் வந்தார். ஹீரோ அந்தஸ்தை தந்த படம் ஜிகர்தண்டா. இதைத்தொடர்ந்து பேட்ட, சாமி ஸ்கொயர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் தோன்றி நற்பெயரை பெற்றிருக்கிறார். கடைசியாக இந்தியன் 2 படத்தில் போலீஸ் கெட்டப்பில் கமல்ஹாசனோடு இணைந்து நடித்திருந்தார்.

இந்தியன் 2 சர்ச்சை: இந்தியன் 2 படம் வெளியான நேரத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தன. இப்படம் பெரிய சோதனை என்றும் இதுவரை இல்லாத அளவிற்கு கமல் கரியரில் மிக மோசமான படம் என்றும் விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில், இப்படத்திற்கு சினிமா விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்கு பாபி சிம்ஹா படம் பிடித்தால் பாருங்கள், பிடிக்கவில்லை என்றால் கருத்தை சொல்லுங்கள், இந்தியன் 2 நல்ல படம்தான் காசு கொடுத்து பார்ப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என தனது சமூகவலைதளத்தில் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதற்கு நெட்டிசன்கள் பாபி சிம்ஹாவை கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்தனர். கமல் கதாப்பாத்திரத்தை தாண்டி ஒரே நாளில் பாபி சிம்ஹா ஃபேமஸ் ஆனார்.

actor-bobby-simhas-luxury-car-accident-in-guindy-kathipara-junction

இந்த சர்ச்சை முடிந்த நிலையில் அடுத்தபடியாக அவர் புதிதாக வீடு கட்டிய போதும் சர்ச்சைகள் வெடித்தன. கொடைக்கானலில் வீடு கட்ட ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டதாக, நடிகர் பாபி சிம்ஹா புகாரளித்திருந்தார். இது தொடர்பாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் பாபி சிம்ஹா வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். வீடு கட்டுவதில் ரூ.1.70 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து. அவர் கட்டிய வீடு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாகவும் பேசப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பு செய்யவில்லை செய்திகள் வெளியானது. 6 மாதங்களுக்கு ஒருமுறை சர்ச்சையில் சிக்கும் பாபி சிம்ஹா தற்போது கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

actor-bobby-simhas-luxury-car-accident-in-guindy-kathipara-junction

கார் விபத்து: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் மெட்ரோ இறக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், 2 கார்கள், 2 ஆட்டோக்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 4 நபர்களுக்கு காயமடைந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சொகுசு காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.

பாபி சிம்ஹா கார் பறிமுதல்: இதில், கார் ஓட்டுநர், மது போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. காயமடைந்த சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில், நடத்திய விசாரணையில், அவர், பெரம்பலூர் மாவட்டம் லப்பை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பதும். இவர், நடிகர் பாபி சிம்ஹாவின் வாகன ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. பாபி சிம்ஹாவின் வீடு மணப்பாக்கத்தில் இருக்கிறது. அவரது தந்தை ஒரு இடத்திற்கு செல்வதற்காக ஓட்டுநர் புஷ்பராஜூவுடன் சென்றிருந்தார். மீண்டும் மணப்பாக்கத்திற்கு திரும்பி கொண்டிருந்தபோது கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பாபி சிம்ஹாவின் காரின் முன் பகுதி நொறுங்கியது குறிப்பிடத்தக்கது. பின்னர் போலீசார் ஓட்டுநர் புஷ்பராஜை கைது செய்து பாபி சிம்ஹாவின் காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X