அடிச்சுக் கூட கேப்பாங்க..அப்பவும் சொல்லாதீங்க.. எனக்கு கொரோனா இல்லப்பா.. போண்டா மணி கோபம்!

சென்னை: தனக்கு கொரானோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக பரவும் வதந்தியால் செம டென்ஷன் ஆகியிருக்கிறார் நடிகர் போண்டா மணி.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகநாடுகள் பீதியில் உறைந்துள்ளன. சீனாவில் இருந்து பரவிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுக்க பரவ தொடங்கியிருக்கிறது.

கொரோனா வைரஸால் சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலக நாடுகள் தடை

உலக நாடுகள் தடை

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் மரணம் தான் என்ற தகவலும் பரவி வருகிறது. முதலில் லேசான ஜலதோஷம் இருமல், சளியில் ஆரம்பிக்கும் வைரஸ் பாதிப்பு கடைசியில் மரணத்தில் முடிந்து விடுகிறது. மிகவும் எளிதாக மற்றவர்களுக்கு பரவி வருகிறது கொரோனா வைரஸ். இதனால் தங்கள் நாடுகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் சீனாவுக்கு செல்லவும் சீனப் பயணிகள் தங்களின் நாடுகளுக்கு வருவதற்கும் உலக நாடுகள் தடை விதித்து வருகின்றன.

போண்டா மணி பாதிப்பு?

போண்டா மணி பாதிப்பு?

கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகரான போண்டாமணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும் போண்டா மணி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது,

விவாதம்

விவாதம்

போண்டா மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என பரவிய தகவல் திரைத்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். போண்டா மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல்தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்.

வதந்தி நம்பாதீங்க

வதந்தி நம்பாதீங்க

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் போண்டாமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தவறான தகவலை பரப்பி உள்ளனர். இது முற்றிலும் வதந்தி. நான் நலமாக இருக்கிறேன். படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக்கொண்டு இருக்கிறேன். என்னை பற்றி தவறாக பரவும் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என கோட்டுக்கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X