திருமண உறவு எந்த இடத்தில் உடைகிறது.. Divorce குறித்து.. போஸ் வெங்கட் சொன்ன குட்டிக்கதை!
சென்னை: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து அதிகரித்து வருகிறது. பிரபலங்களின் விவாகரத்து அப்பட்டமாக வெளியில் தெரிந்துவிடுகிறது. ஆனால், சாதாரண மக்கள் பலரும், திருமணமான ஒரே ஆண்டிலேயே, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் நிற்கின்றனர். விவாகரத்து சரியா, தவறா என்று பட்டிமன்றம் நடந்தும் அளவிற்கு போய்விட்டது. இதுகுறித்து நடிகர் போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
விவாகரத்து என்பது வாழ்க்கைக்கு தேவையில்லாத ஒன்று, நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். புல்லட் பைக் கனமானது என்பதால் அந்த பைக்கை நான் வாங்கவில்லை, ஆனால், ஆக்டிவா எனக்கு சௌகரியமாக இருந்தது. புல்லட் வாங்குவதற்கு என்னிடம் பணம் இருந்தாலும், சௌகரியமாக இருக்கும் ஆக்டிவாவை நான் வாங்கினேன். சிறிய தூரம் பயணம் செய்வதற்கே, நம் நமக்கு எது சரியாக வருமோ அந்த வாகனத்தை தேர்வு செய்து நாம் வாங்குகிறோம். ஆனால் வாழ்க்கை பயணத்தில், காசுக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒன்றை வாங்கி விட்டால் கடைசியில் விற்று தான் ஆக வேண்டும். அது போல தான் டைவர்ஸ்.

புரிதல் இன்மை: நம் வாழ்க்கைக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை தேர்வு செய்து வாங்க வேண்டும். ஒரு வேலை, பொருத்தம் இல்லாத உறவு அமைந்துவிட்டால் கூட, அந்த வாழ்க்கையே வாழ பழகிக் கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு சரிப்பட்டு வராது என்பதற்காக ஒரு பெண்ணை விவாகரத்து செய்வதும், ஒரு பெண் ஆணை விவாகரத்து செய்வது என்பது பெரிய பாவம். விவாகரத்து என்பது புரிதல் இன்மைதான். வாழ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், யாருடனும் சேர்ந்து வாழலாம். ஒரு இடத்தில் கம்பர்ட்ஜோன் மிஸ் ஆகும் போது தான், வேண்டாம் என்று பிரிந்து விடுகிறார்கள். ஆனால் சிலரின் விவகாரத்தில் ஒரு நியாயமானதாகவே இருக்கிறது. ஆனால், பலரின் விவாகரத்தில் நியாயமே இல்லை.
குட்டி கதை: வெளிநாடுகளில் வாய் துர்நாற்றம், உடல் நாற்றம் போன்ற காரணத்திற்காகவே அதிக விவகாரத்து நடக்கிறது. ஆனால், நம் நாட்டில் அதுபோன்று நடப்பதில்லை, அன்றைய தேவைக்காக ஒரு திருமணத்தை செய்து விட்டு, பின் அது ஒத்துவரவில்லை என்று பிரிந்து விடுகிறார்கள். என்னை பொறுத்த வரைக்கும் திருமண வாழ்க்கை என்பது. நம்மை நம்பி வந்த பெண், நமக்கும் பிறக்கும் குழந்தைகளை பேணிக்காப்பது தான். நான் திருமணத்திற்கு சென்றாலும் உடனே வந்துவிட மாட்டேன், மணமக்களை சந்தித்து, திருமண உறவு எந்த இடத்தில் உடைகிறது என்பதை சொல்லி அவர்களுக்கு புரியவைப்பேன் என்று போஸ் வெங்கட் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications