இதெல்லாம் பக்கத்து வீட்ல நடந்தது.. என் கண்ணால பார்த்தது.. கன்னிமாடம் குறித்து மனம் திறந்த போஸ்!
Recommended Video
சென்னை: கன்னி மாடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நடிகர் போஸ் வெங்கட் படம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மெட்டி ஒலி சீரியலின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெங்கட். அந்த சீரியலில் போஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்ற அவர், பின்னர் போஸ் வெங்கட் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

சின்னத்திரையில் வெற்றி பெற்ற போஸ் வெங்கட் பின்னர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். கார்த்தி, சூர்யா, ஜீவா, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் போஸ்.

இந்நிலையில் கன்னிமாடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். நேற்று வெளியான இப்படம் மூலம் மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறார். நடிகராக வெற்றி பெற்ற போஸ் வெங்கட், இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

கன்னி மாடம் படம் குறித்து பேசிய அவர் சென்னையில் ஆரம்ப காலத்தில் தான் ஆட்டோ டிரைவராக இருந்த போது சந்தித்த உண்மை சம்பவங்களைதான் படமாக எடுத்திருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தனது பக்கத்து வீட்டில் நடந்த சம்பவங்கள் தான் இது என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











