Brahmanandam: கின்னசில் இடம்பெற்ற பணக்கார காமெடியன்.. அடேங்கப்பா இப்படி ஒரு சாதனையா?
ஐதராபாத்: தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அடுத்தடுத்து 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார் காமெடி நடிகர் பிரம்மாந்தம். கடந்த 1987ம் ஆண்டில் தெலுங்கில் தன்னுடைய முதல் படத்தில் நடிக்கத் துவங்கிய இவர், அடுத்தடுத்த படங்களில் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் நடித்து வருகிறார்.
இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. 67 வயதாகும் பிரம்மானந்தம் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசான குண்டூர் காரம் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய 500 கோடிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் பிரம்மானந்தம்: நடிகர் பிரம்மானந்தம் தெலுங்குப் படவுலகில் சூப்பர் காமெடியனாக வலம்வந்துக் கொண்டிருப்பவர். ஆனாலும் தமிழ், கன்னட மொழிப்படங்களிலும் நடித்துவரும் இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவரும் பிரேமானந்தம் 1000 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். காமெடியனாக மட்டுமில்லாமல் கேரக்டர் ரோல்களிலும் சிறப்பாக நடித்து வரும் பிரம்மானந்தம் கடந்த 1987ம் ஆண்டில் தெலுங்கில் தன்னுடைய என்ட்ரியை துவங்கினார். அது முதல் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் படங்களில் நடித்து வருகிறார்.
500 கோடி சொத்து மதிப்பு: தொடர்ந்து தெலுங்கின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவருகிறார். இவரது கால்ஷீட்டிற்காக முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் காத்திருக்கும் சம்பவங்கள் தெலுங்கில் அதிகம். 67 வயதாகும் பிரம்மானந்தம் இந்திய அளவில் பணக்கார நடிகராக உள்ளார். 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது சொத்து மதிப்பு 500 கோடிகளை தாண்டியுள்ளது. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படம் பிரம்மானந்தத்திற்கு மிகச்சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது காமெடி சென்சை பார்த்து வியக்காத ரசிகர்களே இல்லை என்றும் கூறலாம்.
கின்னஸ் புத்தகத்தில் இடம்: இந்நிலையில் கடந்த 39 வருடங்களில் 1000 படங்களை முடித்த உலகின் ஒரே நடிகர் பிரம்மானந்தம் மட்டுமே என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரம்மானந்தம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்த நிலையை எட்டியுள்ளார். இவரது வெற்றிக்கதை அனைத்து தரப்பிரனருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். முதலில் சில படங்களில் நடித்தாலும் இவருக்கு சிரஞ்சீவி மூலமாகவே அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்தன.
சிரஞ்சீவி பெற்றுக் கொடுத்த வாய்ப்பு: இவரது மிமிக்ரி திறமையை பார்த்து இம்ப்ரஸ் ஆன சிரஞ்சீவி வாய்ப்புகள் கிடைக்க உதவியதாக முன்னதாக பேட்டியொன்றில் கூறியுள்ளார். சிறந்த நடிப்பிற்காக இவருக்கு கடந்த 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் அதிகமாக பெற்றுள்ள பிரம்மானந்தம் இந்த வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மிகப்பெரிய விருதான கின்னசில் சாதனை படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











