ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸுக்கு குணப்படுத்த முடியாத இப்படி ஒரு நோயா? வருத்தத்தில் ரசிகர்கள்!
நியூயார்க் : நடிகர் புரூஸ் வில்லிஸுக்கு சிகிச்சையளிக்க முடியாத மூளை செல் நோயானா டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் புரூஸ் வில்லிஸ் 1980 ஆம் ஆண்டு தி ஃபர்ஸ்ட் டெட்லி சின் படத்தின் நடித்தன் மூலம் சினிமாவில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
மியாமி வைஸ், தி ட்விலைட் சோன், மூன்லைட்டின் போன்ற சீரியல் படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகர் புரூஸ் வில்லிஸ்
டை ஹார்ட் என்ற திரைப்படத்தில், ஜான் மெக்லேன் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்து அதிரடி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அந்த படம் நான்கு பாகங்களாக வெளியானது. இதைத்தொடர்ந்து, அபோகாலிப்ஸ், லுக் ஹூ இஸ் டாக்கிங், ஹட்சன் ஹாக், போ வெயின்பெர்க் இன் பில்லி பாத்கேட், தி லாஸ்ட் பாய் ஸ்கவுட் ஆகிய படங்களில் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

பல விருதுகள்
பல படங்களில் சிறப்பாக நடித்தற்காக மூன்று முறை கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளார். மேலும், சின்னத்திரையில், சிறந்த முன்னணி நடிகருக்கான இரண்டு முறை பிரைம் டைம் எம்மி விருதை பெற்றார். பொழுதுபோக்கு துறையில் ஒரு அசாதாரண கலைஞருக்கான அமெரிக்கன் சினிமாதேக் விருதை விருதையும், 2002 ஹார்வர்டின் ஹாஸ்டி புட்டிங் தியேட்டர்ஸில் இருந்து தி ஹாஸ்டி புட்டிங் மேன் ஆஃப் தி இயர் விருது என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

இரண்டு திருமணம்
டெமி மூர் என்பவரை 1987ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதையடுத்து, பல ஆண்டுகள் தனிமையில் இருந்த வில்லிஸ் 2009ம் ஆண்டு எம்மா ஹெமிங் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் என, புரூஸ் வில்லிஸூக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.

மூளை செல் நோய்
உடல்நிலைக்கு குறைவு காரணமான கடந்த ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த புரூஸ் வில்லிஸ், மூளை செல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாதித்தவர்கள் பேசுவது,எழுதுவது, நடப்பது, புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். இந்த நோய்க்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை. இது இனி வரும் காலத்தில் நிச்சயம் இந்தநிலை மாறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று புரூஸ் வில்லிஸ் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











