நடிகை மீது புகார் கொடுத்த ஹீரோ.. வெளிநாடு செல்ல முயன்றபோது ஏர்போர்ட்டில் கைது.. சரமாரி விசாரணை!

By

ஐதராபாத்: வெளிநாட்டுக்குச் செல்ல இருந்த பிரபல நடிகர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழில், யார் இவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் சச்சின் ஜோஷி.

தொழிலபதிரான இவர் இந்தி, தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். படங்களை தயாரித்தும் வருகிறார்.

வர்மாவின் வீரப்பன்

வர்மாவின் வீரப்பன்

அவர் நடித்த யார் இவன் படத்தில் இஷா குப்தா ஹீரோயினாக நடித்திருந்தார். பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தெலுங்கு படமான இது, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. அடுத்து ராம் கோபால் வர்மா இயக்கிய வீரப்பன் படத்தின் இந்தி ரீமேக்கில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்தியில் ஆஜான், மும்பை மிர்ரர், அமவாஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

குட்கா பறிமுதல்

குட்கா பறிமுதல்

இந்தி நடிகையும் மாடலுமான ஊர்வசி சர்மாவை திருமணம் செய்துள்ள இவர், துபாயில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்தில் சுமார் 80 பெட்டிகளில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக, நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி சேர்க்கப்பட்டிருந்தார்.

தடுத்து நிறுத்தம்

தடுத்து நிறுத்தம்

அவர் வெளிநாட்டில் வசித்து வந்ததால், ஐதராபாத் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் மும்பை வந்த சச்சின் ஜோஷி, மீண்டும் துபாய் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை முயன்றார். அப்போது இமிக்கிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஐதராபாத்தில் விசாரணை

ஐதராபாத்தில் விசாரணை

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஐதராபாத் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெலுங்கு மீடியாவில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஐதரபாத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஷில்பா ஷெட்டி, மற்றும் அவர் கணவருக்கு எதிராக புகார் கூறியிருந்தார்.

மறுத்த ஷில்பா

மறுத்த ஷில்பா

சத்யுக் கோல்ட் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்தின் தங்க நகைத் திட்டத்தில் தன்னிடம் மோசடி செய்ததாக அவர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்திருந்தார். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதை நடிகை ஷில்பா ஷெட்டி மறுத்திருந்தார். 'சச்சின் ஜோஷியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை' என்று அவர் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X