அப்போ ஜாவா சுந்தரேசன்.. இப்போ மைக்கேல் ஜாக்சன்.. கோலிவுட்டை கலக்கும் நடிகர் சாம்ஸ்!
சென்னை: நடிப்பில் ஒரு புது அவதாரம் எடுத்துள்ளார் சாம்ஸ். பல கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது நடன புகழ் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் உண்டு. அதிலும்,
கிரேஸி மோகனின் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. அவரின் வசனங்கள் மற்றும் நடிப்பும் மிகவும் அற்புதமாக இருக்கும்.

அவருடன் இணைந்து பணியாற்றியவர் தான் சாம்ஸ். கிரேஸி மோகனின் மேடை நாடகங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருந்தார். பின் திறைத்துறையில் காதல் மன்னன் படத்தில் அறிமுகமானார். இவர் ரஜினி, விஐய் மற்றும் பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
இவரை மக்களிடையே எடுத்து சென்ற படம் அறை எண் 305ல் கடவுள். இதில், ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. பின்னாளில் இவர் நடித்த படம் தான் பயணம் இப்படத்திலும் இவரின் நடிப்பு பேசப்பட்டது.

தற்போது வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார் சாம்ஸ். இந்த நிலை மாறும் என்ற திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதில் நடிகர் சாம்ஸ் மைக்கேல் ஜாக்சன் போல வேடமணிந்து நடித்து உள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமுக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் சாம்ஸ். இந்த படத்திலும் தவறவில்லை. மறைந்த பிரபல இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் போல நடனமும் ஆடி படத்தை பார்க்கவரும் அனைவரையும் கண்டிப்பாக சிரிக்க வைப்பார் சாம்ஸ்.
இப்படத்தில் சாம்ஸ் உடன் லட்சுமி ராமகிருஷ்ணன், டெல்லி கனேஷ், சந்தான பாரதி ஆகியோர் நடித்து உள்ளனர். அருண் காந்த் என்பவர்


Click it and Unblock the Notifications











