Charan Raj: லால் சலாம் படத்தில் நடிக்கும் சரண்ராஜ்.. 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லால் சலாம் படம் அதிகமான வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்புகளுகிடையில் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் கதைக்களம் கிரிக்கெட்டை மையமாக கொண்டுள்ளது. தேர்த்திருவிழா மற்றும் அந்த ஊரில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ரஜினி கூறியிருந்தார்.

இந்தப் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடித்திருந்தாலும் மிகவும் வெயிட்டான கேரக்டர் என்பது படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவற்றின்மூலம் தெரியவந்துள்ளது. படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்தப் படம் திருவிழா மற்றும் கிரிக்கெட் இவற்றின் அரசியலை பேசுவதாக அமைந்துள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் செந்தில், நிரோஷா உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களும் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Actor Charan Raj joined in Lal salaam movie as Rajinikanths friend character

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ளார். படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், நிரோஷா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். திருவிழா மற்றும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தின் ரஜினியின் கேரக்டர் கேமியோவாக இருந்தபோதிலும் அனைவரையும் வெகுவாக கவரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

விஷ்ணு விஷால் உற்சாகம்: இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ரஜினி கேமியோ ரோலில் நடிக்கும் படத்தில் தான் லீட் கேரக்டரில் நடித்துள்ளது மிகவும் அதிர்ஷ்டம் என்று விஷ்ணு விஷால் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார். முதல்முறையாக தன்னுடைய படத்தின் ரிலீசின்போது பதற்றமின்றி தூங்கப் போவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த் -ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தப்படத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். விக்ராந்தும் இந்தப் படம் தனக்கு புதிய வெளிச்சத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

லால் சலாம் படத்தில் சரண்ராஜ்: இந்தப் படத்தில் நடிகர் ரஜினியின் நண்பராக சரண்ராஜ் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய உற்சாகத்தை தெரிவித்துள்ளார். பாட்சா படத்தில் இணைந்திருந்த இந்தக் கூட்டணி தற்போது 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்துள்ளது. தான் ரஜினியிடம் எப்போதும், இருவரும் இணைந்து நடிப்பது குறித்து கேட்பேன் என்றும் அதற்கு ரஜினிகாந்த், தன்னை சும்மா கூப்பிடக்கூடாது, நல்ல கேரக்டர் இருந்தால்தான் கூப்பிட வேண்டும என்று கூறியதாகவும் சரண்ராஜ் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பாட்ஷா படத்தில் நடிகர் சரண்ராஜ், அன்வர் பாட்ஷாவாக நடித்திருந்தார்.

ரசிகர்கள் உற்சாகம்: படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிகர் செந்தில் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு சிறப்பானகேரக்டர் அமைந்துள்ளது ட்ரெயிலர் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சரண்ராஜ் படத்தில் ரஜினியின் நண்பராக நடித்துள்ளது குறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். இந்த கேரக்டர் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான சர்ப்பிரைசை கொடுக்கும் என்பது நாளை தெரிந்துவிடும். படத்தில் இதுபோன்ற பல சர்ப்பிரைஸ்கள் காத்திருப்பதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X