மேரா நாம் ஜோக்கர் மாதிரி ஒரு படத்துல நடிச்சிடனும்.. நடிகர் சார்லியின் சின்ன சின்ன ஆசை!

Recommended Video

நடிகர் சார்லியின் சின்ன சின்ன ஆசை! | Actor Charlie

சென்னை: நகைச்சுவை நடிகர் சார்லி குறித்த சுவாரசிய தகவல்கள் வீடியோவாக உங்கள் பார்வைக்கு!

நடிகர் சார்லி தமிழில் இதுவரை 800க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமான சார்லி தொடர்ந்து இன்று வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Actor Charle wants to act in a movie like Mera naam Jokkar- video

நடிகர் சார்லிக்கு எப்படியாவது 1970ஆம் ஆண்டு இந்தி நடிகர் ராஜ் கபூர் நடிப்பில் வெளியான மேரா நாம் ஜோக்கர் போன்ற படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. கோவில்பட்டியை சொந்த ஊராக கொண்ட சார்லி, தனது நகைச்சுவை மூலம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது கனவு

அஜித், முரளி, விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நண்பராக நடித்துள்ளார் சார்லி. பாக்கியராஜின் இயக்கத்தில் வெளியான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற படத்தில் ரிக்ஷாகாராக வந்து கலக்கியிருப்பார்.

நடிகர் ரஜினிகாந்துடன் தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்திருக்கும் ஈயடிக்கும் காட்சி, மோகனுடன் மெல்ல திறந்தது கதவு படத்திலும் கல்லூரி மாணவராக கலக்கியிருப்பார். பூவே உனக்காக படத்தில் ஓ பியாரி பாடலுக்கு அப்படி ஒரு எக்ஸ்பிரஷனில் டான்ஸ் ஆடி ரசிகர்களை அசத்தியிருப்பார் சார்லி. அவர் குறித்த மேலும் பல தகவல்கள் உங்களுக்காக..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X