அடடே இது தெரியாம போச்சே.. நடிகர் சார்லியின் அசர வைக்கும் உண்மை முகம்!

சென்னை : நகைச்சுவை நடிகர் சார்லி இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இணையத்தில் நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் சார்லி, இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகம் ஆனார்.

800 மேற்பட்ட படங்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்த நடிகர் சார்லியின் அசரவைக்கும், பலருக்கும் தெரியாத பல உண்மை தகவல்களை பார்க்கலாமா?

நடிகர் சார்லி

நடிகர் சார்லி

1960ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். சினிமாவுக்காகவும், ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மீது இருந்த பற்றாலும் தனது பெயரை சார்லி என்று மாற்றிக்கொண்டார். சிவாஜி கணேசன், நாகேஷ், முத்துராமன் போன்ற பல நடிகர்களைப்போல் மிமிக்ரி செய்து அசத்துவதில் கை தேர்ந்தவர். இவரின் மிமிக்ரி திறமையை பார்த்து நாகேஷ் பல முறை பாராட்டி உள்ளார்.

கண்டிப்பான ஆசிரியரின் மகன்

கண்டிப்பான ஆசிரியரின் மகன்

சார்லியின் அப்பா ஒரு ஆசிரியர், படிப்பைவிட ஒழுக்கம் தான் முக்கியம் என்ற நினைக்கும் ஒரு கண்டிப்பான ஆசிரியர். கோவில்பட்டி நாடார் உயிர்நிலைப்பள்ளியில் தங்கசாமி ஆசிரியரின் பெயரை கேட்டாலே மாணவர்கள் எல்லாம் நடுங்குவார்கள் அந்த அளவுக்கு கண்டிப்பாக இருந்தார். அவரின் வழிகாட்டுதலில் வந்த சார்லி, சினிமாவில் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தார். இதுவரை இவரை பற்றி கிசுகிசுவோ, மோசமான நடிகர் என்றோ எந்த ஒரு செய்தியும் வந்தது இல்லை.

சத்தமே இல்லாமல் பல உதவி

சத்தமே இல்லாமல் பல உதவி

ஆசிரியரின் மகனான சார்லி, தனது தந்தையைப் போலவே ஆசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைபட்டார். ஆனால், காலம், அவரை சினிமாவில் ஒரு நடிகராக்கியது. பாடம் நடத்தினால் தான் ஆசிரியரா? படிக்க உதவினாலும் ஆசிரியர் தான் என, படிக்க முடியாமல், இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்து மகிழ்வது சார்லியின் ஸ்பெஷல்.

உலக சினிமா விரல் நுனியில்

உலக சினிமா விரல் நுனியில்

புத்தக வாசிப்பில் அதிக ஈடுபாடு கொண்ட சார்லி, தனது வீட்டில் பல அரியவை புத்தகங்களை வைத்து இருக்கிறார். உலக இலக்கியங்கள், உலக சினிமா என அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்திருக்கும் சார்லி. வாசிப்போடு மட்டும் தன்னை சுருக்கி கொள்ள வில்லை சார்லி. கடந்த 2013ம் ஆண்டு தமிழ் திரைபட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் அழகப்பா பல்கலை கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். மேலும், கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும், அதை உண்ண முடியாது என்பது சார்லியின் கொள்கைகளில் ஒன்றாகவே வைத்து பலருக்கு உதவி செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X