சத்தமில்லாமல் சாதித்த சார்லி.. இவருக்கு இப்படி ஒரு முகமா.. எல்லோரையும் வியக்க வெச்சுட்டாரே!
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டதற்காக நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: காமெடி நடிகர் சார்லிக்கு தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் சார்லி. ஆரம்ப காலத்தில் காமெடியான நடித்து வந்த சார்லி, ஒருகட்டத்திற்கு பிறகு குணச்சித்திர நடிகரானார். தற்போதும் அதே பாதையில் பயணித்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 1960 ஆண்டு பிறந்த சார்லி, சினிமா நடிகரானது 1982ம் ஆண்டு. கே.பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை எனும் படத்தில் தான் சார்லி அறிமுகப்படுத்தப்பட்டார். பாலசந்தர் அறிமுகப்படுத்திய பல நடிகர்களில் தானும் ஒருவர் என்பது சார்லி பெருமையாக சொல்லிக் கொள்ளும் விஷயம்.
தமிழில் இதுவரை 800க்கு அதிகமான படங்களில் நடித்திருக்கிறார் சார்லி. மனோகர் எனும் தனது இயற்பெயரை சார்லி சாப்ளின் மீதான காதலால் சார்லி என மாற்றக்கொண்டவர் அவர். தமிழக அரசின் சிறந்த காமெடி நடிகருக்கான விருது, கலைமாமணி விருது ஆகியவற்றை அவர் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் அவரது புகழ் மகுடத்தில் மற்றொரு சிறகாக வந்து சேர்ந்திருக்கிறது முனைவர் பட்டம். தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சார்லி சமர்ப்பித்துள்ளார். அதற்காக அவருக்கு தமிழ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறது. நேற்றைய முன்தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சார்லிக்கு முனைவர் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.


Click it and Unblock the Notifications











