சார்லி பெயரில் தொடங்கப்பட்ட டிவிட்டர் கணக்கு போலி.. புகார் அளித்த 30 நிமிடங்களில் முடக்கிய போலீஸ்!
சென்னை: தனது பெயரில் தொடங்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கை போலீசார் 30 நிமிடங்களில் முடக்கி அதிரடி காட்டியுள்ளார்.
Recommended Video
நடிகர் சார்லி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சார்லி பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது.

போலியாக கணக்கு
ரசிகர்கள் பலரும் அதனை சார்லியின் அதிகாரப்பூர்வ கணக்கு என்று நினைத்து பின் தொடர ஆரம்பித்தனர். இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தார்.

எதிலும் கணக்கு இல்லை
மேலும் தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் தன்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. எந்த சமூக வலைதளத்திலும் தனக்கு கணக்கு இல்லை.

பின்தொடர வேண்டாம்
ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தும் அவசியம் இதுவரை தனக்கு வரவில்லை தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி கணக்கை ரசிகர்கள் பின்தொடர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

போலி கணக்கு முடக்கம்
சார்லி புகார் அளித்த 30 நிமிடங்களில் சைபர் கிரைம் போலீசார் அவரது பெயரில் தொடங்கப்பட்ட கணக்கு போலி என்பதை கண்டுப்பிடித்து அந்த கணக்கை முடக்கினர். 30 நிமிடத்தில் அதிரடியாக செயல்பட்டு போலி கணக்கை முடக்கிய சென்னை காவல்துறைக்கு நடிகர் சார்லி நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











