கிரேஸி மோகனுக்கு மாபெரும் இழப்பு... மறைந்தார் "சீனு" மோகன்!
Recommended Video

பிரபல நடிகர் சீனுமோகன் மாரடைப்பால் திடீர் மரணம்- வீடியோ
சென்னை : ரஜினி, விஜய் சேதுபதியுடன் நடித்த பிரபல நடிகர் சீனுமோகன் காலமானார்.
தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் பிரபல நடிகர் சீனுமோகன். கிரேஸி மோகன் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் இவர்.

நிறைய தொலைக்காட்சி சீரியர்களிலும் சீனுமோகன் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இறைவி படத்தில் அவர் நடித்தார். இதில் விஜய் சேதுபதியின் மாமாவாக அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் காலை அவர் திடீரென உயிரிழந்தார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிசிச்சை பலனின்றி அவர்து உயிர் பிரிந்தது.
சீனுமோகன் சுமார் 3000த்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கிரேஸி மோகனின் நாடகக்குழுவில் 1979ம் ஆண்டு முதல் இணைந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications