Chiranjeevi :நடிகர் சிரஞ்சீவிக்கு கேன்சரா.. அவரே கொடுத்த விளக்கம்!
ஐதராபாத் : நடிகர் சிரஞ்சீவி தெலுங்குப்பட உலகின் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை கொண்டவராக காணப்படுகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வால்டர் வீரய்யா படம் இவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. படத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாகியிருந்தார்.
தன்னுடைய அரசியல் பிரவேசம் காரணமாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்த சிரஞ்சீவி, தற்போது இந்தப் படத்தின்மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

கேன்சர் வதந்தி குறித்து சிரஞ்சீவி கொடுத்த விளக்கம் : நடிகர் சிரஞ்சீவி தெலுங்குப்பட உலகின் முன்னணி நடிகராக, ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில், சில காலங்கள் தீவிர அரசியலில் அவர் ஈடுபட்டதால் படங்களில் நடிக்காமல் இடைவெளி எடுத்துக் கொண்டார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில், அவருக்கு சிறப்பான படங்கள் அமையவில்லை. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் இவரது நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும் மிகப்பெரிய ஹீரோவாக தெலுங்குப் படவுலகில் மாறியுள்ளார். சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அவரும் ஜூனியர் என்டிஆரும் இணைந்து ஆடியிருந்த நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் ராம்சரண் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ஷங்கர் இயக்கத்திலும் ராம்சரண் நடித்து வருகிறார். இந்நிலையில், சிரஞ்சீவியின் இடத்தை பிடிக்க ராம்சரண், ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, பிரபாஸ் உள்ளிட்டவர்கள் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் சிரஞ்சீவியும் இணைந்துள்ளார். அவரது சமீபத்திய படம் கவனத்தை பெற்றுள்ளது. முன்னதாக அவரது நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட காட்ஃபாதர் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வசூலிலும் சொதப்பியது.
இந்நிலையில் சிரஞ்சீவிக்கு கேன்சர் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று தற்போது குணமாகியுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து சிரஞ்சீவியை நலம் விசாரித்து வருகிறார்களாம். இதனால் தற்போது இந்த விஷயத்தில் விளக்கம் அளித்துள்ளார் சிரஞ்சீவி. தனக்கு கேன்சர் இல்லை என்றும் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு இந்த செய்தி பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் ஒரு கேன்சர் சென்டர் திறப்பு விழாவில் பங்கேற்று, நிகழ்ச்சியில் பேசியபோது, ரெகுலராக கேன்சருக்கான டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், கேன்சரை தவிர்க்கலாம் என்றும் பேசியதாகவும் அதேபோல தான் கோலன் ஸ்கோப் டெஸ்ட் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ள அவர், அப்போது தனக்கு நான் கேன்சரஸ் பாலிப்ஸ் இருந்தது கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தான் உரிய நேரத்தில் டெஸ்ட் செய்ததால் தனக்கு கேன்சர் வருவது தவிர்க்கப்பட்டதாகவும் அந்த நிகழ்ச்சியில் தான் பேசியதாக சிரஞ்சீவி தெரிவித்திருந்தார். தன்னுடைய இந்த பேச்சுதான் தற்போது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு தனக்கு கேன்சர் என்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சிரஞ்சீவி, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











