அதர்வாவுக்கு ஜூனியர் கேப்டன் என்று பெயரிட்ட சின்னி ஜெயந்த்.. ஏன் தெரியுமா!

சென்னை : நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ட்ரிகர் படம் வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தில் அவருடன் சின்னி ஜெயந்த், அருண் பாண்டியன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

சாம் ஆன்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சுருதி நல்லப்பா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதர்வாவின் ட்ரிகர் படம்

அதர்வாவின் ட்ரிகர் படம்

நடிகர் முரளியின் மகனான அதர்வா, பானா காத்தாடி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே சமந்தாவுடன் நடித்திருந்த இவர், இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.

இமைக்கா நொடிகள் படம்

இமைக்கா நொடிகள் படம்

நயன்தாராவுடன் இவர் நடித்திருந்த இமைக்கா நொடிகள் படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் முழுக்க முழுக்க காமெடி களத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

23ம் தேதி ரிலீசாகும் ட்ரிகர்

23ம் தேதி ரிலீசாகும் ட்ரிகர்

இந்நிலையில் வரும் செப்டம்பர் 23ம் தேதி இவரது ட்ரிகர் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சாம் ஆன்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தன்யா ரவிச்சந்திரன் அதர்வாவிற்கு ஜோடியாகியுள்ளார். பிரமோத் பிலிம்ஸ் சார்பில் சுருதி செல்லப்பா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படத்தில் கோபக்கார இளைஞனாக அதர்வாக நடித்துள்ளார்.

வரவேற்பை பெற்ற ட்ரெயிலர்

வரவேற்பை பெற்ற ட்ரெயிலர்

இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியான நிலையில், சில தினங்களிலேயே 5 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். படத்தில் நடித்துள்ள சின்னி ஜெயந்த் விஜய்காந்த், அர்ஜூன் போன்றவர்களின் ஆக்ஷனை தான் வெகுவாக ரசித்ததாக தெரிவித்துள்ளார்.

சின்னி ஜெயந்த் கொடுத்த பட்டப்பெயர்

சின்னி ஜெயந்த் கொடுத்த பட்டப்பெயர்

அதேபோல இந்தப் படத்தில் அதர்வாவின் ஆக்ஷன் காட்சிகள் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் இனி தான் அவரை ஜூனியர் கேப்டன் என்றே அழைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் சர்தார் படத்திற்கு வசனம் எழுதிய பிஎஸ் மித்ரன் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

கைக்கொடுக்குமா ட்ரிகர்?

கைக்கொடுக்குமா ட்ரிகர்?

அதர்வா தொடர்ந்து கோலிவுட்டில் முன்னணி நடிகராகும் முயற்சியில் தீவிரமாக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான தள்ளிப் போகாதே இவருக்கு கைக்கொடுக்காத நிலையில், குருதி ஆட்டம் நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தற்போது ட்ரிகர் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் அதர்வாவிற்கு சிறப்பாக கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X