சின்னி ஜெயந்த்தை பெருமைப்பட வைத்த மகன்...அப்படி என்ன நடந்தது தெரியுமா ?

சென்னை : பொதுவாக சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே தாங்கள் ஃபீல்டில் இருக்கும் போதே தங்களின் வாரிசுகளை சினிமாவிற்குள் நுழைக்க முயற்சிப்பார்கள். இல்லையென்றால் தாங்களே சொந்தமாக படமெடுத்து அதில் மகன் அல்லது மகளை நடிக்க வைத்து, திரையுலகிற்கு அறிமுகம் செய்வார்கள்.

சிவாஜி காலம் தொட்டு இது தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போதும் சிம்பு, அதர்வா முரளி, கவுதம் கார்த்திக், கீர்த்தி சுரேஷ்,விக்ரம் பிரபு, சிபிராஜ், ஸ்ருதி ஹாசன், துருவ் விக்ரம், வரலட்சுமி சரத்குமார் என பல வாரிசு நடிகர்கள் டாப் ஹீரோ/ ஹீரோயின்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சின்னி ஜெயந்த்தை பெருமைப்பட வைத்த மகன்

சின்னி ஜெயந்த்தை பெருமைப்பட வைத்த மகன்

ஆனால் திரையுலகில் வெகு சிலர் மட்டுமே தங்களின் வாரிசுகளை வெளி உலகிற்கு காட்டாமல், சாதாரணமாக வளர்த்து வருகின்றனர். அப்படி தனது மகனை சினிமாவிற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல், நன்கு படிக்க வைத்துள்ளார் நடிகர் சின்ன ஜெயந்தி. இன்று தனது மகனை நினைத்து அவர் பெருமைப்பட்டும் வருகிறார்.

பெயரை மாற்றி சின்னி ஜெயந்த்

பெயரை மாற்றி சின்னி ஜெயந்த்

1980 மற்றும் 1990 களில் ஏராளமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சின்னி ஜெயந்தி. சினிமாவிற்காக கிருஷ்ணமூர்த்தி நாராயணன் என்ற தனது பெயரை மாற்றிக் கொண்ட இவர் டைரக்டர், தயாரிப்பாளர், காமெடி நடிகர், மிமிக்ரி கலைஞர் என பல திறமைகளைக் கொண்டவர். ஏராளமான படங்களில் ஹீரோவிற்கு நண்பனாக முக்கிய ரோல்களில் நடித்து புகழ்பெற்றவர்.

டாக்டர் பட்டம் பெற்ற கலைஞர்

டாக்டர் பட்டம் பெற்ற கலைஞர்

அஷ்டலட்சுமி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சின்னி ஜெயந்தி, மிமிக்ரி, நகைச்சுவைக்காக டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சின்னி ஜெயந்தி, ஓரிரு படங்களை இயக்கி உள்ளார். இவரது மகன் ஸ்ருதன்ஜய் நாராயணன். இவரை நினைத்து தான் சின்னி ஜெயந்த் பெருமைப்பட்டு வருகிறார்.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மகன்

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மகன்

அப்படி சின்னி ஜெயந்தின் மகன் என்ன செய்தார் என கேட்கிறீர்களா... இவர் 2019 ல் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி, அதில் நாட்டிலேயே 75 வது ரேங்க் வாங்கி உள்ளார். தற்போது டெபுட்டி கலெக்டராக பதவி நியமனம் பெற்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சின்னி ஜெயந்த் மகனை வாழ்த்திய ரஜினி

சின்னி ஜெயந்த் மகனை வாழ்த்திய ரஜினி

இதற்கு முன் 2020 ம் ஆண்டு சின்னி ஜெயந்தின் மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதை, தனது நெருங்கிய திரையுலக நண்பர்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார் சின்னி ஜெயந்தி. அப்படி அவர் இந்த தகவலை பகிர்ந்த நண்பர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இதை கேட்டதும் உடனடியாக ஸ்ருதன்ஜய்யை போனில் அழைத்த ரஜினி, வாழ்த்து தெரிவித்து, பாராட்டி உள்ளார். பெற்றோர்களை பெருமை அடைய செய்து விட்டதாக கூறி இருந்தார் ரஜினி.

Recommended Video

V-CONNECT | HAPPY BIRTHDAY CHINNI JAYANTH | TELEPHONIC INTERVIEW | FILMIBEAT TAMIL
தூத்துக்குடி டெபுட்டி கலெக்டர்

தூத்துக்குடி டெபுட்டி கலெக்டர்

ஸ்ருதன்ஜய் நாராயணன் தற்போது தூத்துக்குடி மாவட்ட டெபுட்டி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், தான் பணியில் சேர்ந்த உடன் கல்வி வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X