Hanuman: ஒவ்வொரு டிக்கெட்டிலும் அயோத்தி கோயிலுக்கு ரூ. 5.. ஹனுமான் பட திட்டத்தை அறிவித்த சிரஞ்சீவி!

சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியின்போது குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கோயிலை தலைமை கட்டிட கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்துள்ளார். இந்தக் கோயிலை பார்க்க இந்திய அளவில் மட்டுமில்லாமல் வெளிநாட்டு பக்தர்களும் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது திரைப்படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 5 ரூபாயை அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கவுள்ளதாக தெலுங்கில் உருவாகியுள்ள ஹனுமான் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிரஞ்சீவி இதை அறிவித்துள்ளார். மேலும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்துடன் தான் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Actor Chiranjeevi announced that Hanuman movie team plan on ticket sales

அயோத்தியில் ராமர் கோயில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பெறப்பட்டு இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ள இந்த கோயிலின் திறப்பு விழாவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹனுமான் படக்குழுவின் திட்டம்: இந்நிலையில் இந்த கோயிலுக்கு தங்களது திரைப்படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 5 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக ஹனுமான் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வரும் 12ம் தேதி பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ராய் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.

பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி: ஒரு சாதாரண இளைஞனுக்கு கிடைக்கும் சூப்பர் பவரை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இதனிடையே, பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்துடன் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஹனுமன் திரைப்படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 5 ரூபாயை ராமர் கோயிலுக்கு வழங்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் அவர் அறிவித்தார். படக்குழு சார்பில் தான் இதை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த படம்: வரும் பொங்கலையொட்டி தமிழில் கேப்டன் மில்லர், அயலான், மெர்ரி கிறிஸ்துமஸ் போன்ற படங்கள் ரிலீசாகவுள்ளது. இதேபோல தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம், நடிகர் வெங்கடேஷின் சைந்தவ், நாகர்ஜூனாவின் நா சாமி ரங்கா போன்ற படங்களும் ரிலீசாகவுள்ளன. இந்தப் படங்களின் வரிசையில் தற்போது ஹனுமான் படமும் இணைந்துள்ளது. ராமர் கோயில் திறப்பிற்கு முன்னதாக இந்தப் படம் வெளியாகவுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் அதிகமான ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X