அன்னையர் தினத்தில் சிரஞ்சீவி செய்த சிறப்பான செயல்... குவியும் பாராட்டுக்கள்
ஐதராபாத் : நடிகர் சிரஞ்சீவி சிறப்பான பல படங்களில் நடித்து தெலுங்கின் முன்னணி ஹீரோவாக காணப்படுகிறார். தொடர்ந்து நடித்தும் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆச்சார்யா கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி இவர் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Recommended Video

நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவரது மகன் ராம்சரண் தற்போது நடிக்க துவங்கி அவர் முன்னணி நடிகராக மாறியுள்ள நிலையிலும் சிரஞ்சீவியின் மார்க்கெட் அப்படியே இருக்கிறது. அவரது ரசிகர்கள் அவரை தற்போதும் கொண்டாடி வருகின்றனர்.

ஆச்சார்யா படம்
சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்து வெளியான ஆச்சார்யா படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. எதிர்பார்த்த வெற்றியை இந்தப் படம் பெறவில்லை. படத்தை ராம்சரண் தயாரித்திருந்த நிலையில், விநியோகஸ்தர்கள் இந்தப் படம் மூலம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்கள்
தெலுங்கிலிருந்து புஷ்பா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகி வரவேற்பையும் வசூல் மழையையும் பொழிந்துள்ளன. இந்நிலையில் பெரிய நடிகரான சிரஞ்சீவியின் இந்தப் படமும் வெற்றியடையும் என்ற கணிப்பு தற்போது பொய்யாகியுள்ளது. அடுத்ததாக இவரது நடிப்பில் போலோ சங்கர் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது.

போலோ சங்கர் படம்
டைரக்டர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த வேதாளம் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் தற்போது உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக தமன்னாவும் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்து வருகின்றனர். இந்தப் படம் தமிழில் வெற்றியடைந்த நிலையில் தற்போது தெலுங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவிற்கு விருந்து
இந்நிலையில் அன்னையர் தினமான இன்று உலகின் அனைத்து அன்னையர்களுக்கும் நடிகர் சிரஞ்சீவி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். மேலும் தனது அன்னைக்கு அவர் சிறப்பான விருந்தை அளித்துள்ளார். இதன் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











