Chiranjeevi: இதற்காகத்தான் வேதாளம் படத்தை ரீமேக் செய்தேன்.. சிரஞ்சீவி பகிர்ந்த காரணம்!

சென்னை: நடிகர் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது போலா சங்கர்.

ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீசை தொடர்ந்து போலா சங்கர் படம் அடுத்த நாளில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Chiranjeevi clears that why he remake Vedalam movie as Bholaa shankar

தமிழில் அஜித், லட்சுமிமேனன், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் தற்போது உருவாகியுள்ளது.

அஜித்தின் வேதாளம் படத்தை ரீமேக் செய்த காரணத்தை பகிர்ந்த சிரஞ்சீவி: நடிகர் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது போலா சங்கர். இந்தப் படம் ஆக்ஷன் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக தமன்னாவும் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் கடந்த சில வாரங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதனிடையே தற்போது படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரசிகர்கள் ரசிக்கும்படியா அமைந்து, படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. போலா சங்கர் அதிகமான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ள போதிலும் இந்தப் படம் அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக் என்ற விமர்சனங்களும் ஏற்பட்டுள்ளன.

சிரஞ்சீவி தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். இதைவிட்டுவிட்டு அவர் நேரடி தெலுங்குப் படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் இதுகுறித்த பல ட்ரோல்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக ப்ரோ டாடி மலையாள படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இந்நிலையில் இத்தகைய கமெண்ட்களுக்கு போலா சங்கர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பதிலடி கொடுத்துள்ளார்.

வேதாளம் படத்தின் மேக்கிங் தனக்கு பிடித்திருந்ததாகவும் அதனால்தான் அந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தான் நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று தான் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஓடிடி வந்தபிறகு ரீமேக்கெல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்கப்படுவதாகவும், ஆனால் வேதாளம் படம் எந்த ஓடிடியிலும் இல்லை என்றும் அதனால்தான் அந்தப் படத்தை ரீமேக் செய்ய நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நடிகர் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது வேதாளம். அண்ணன் -தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். அனிருத் இசையில் படத்தின் பாடல்களும் கவனம் பெற்றன. படத்தில் கேங்ஸ்டராகவும் டாக்சி டிரைவராகவும் இருவேறு கெட்டப்புகளில் அஜித்தின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து, படத்தை வெற்றிப்படமாக்கியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X