Odisha Train Accident : நாட்டையே நடுங்கவைத்த ரயில் விபத்து… சிரஞ்சீவி இரங்கல் !
சென்னை : ஒடிசாவில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சிரஞ்சீவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்து, நேற்று இரவு ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசாவின் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.

கோரவிபத்து : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததாகவும், இதனால் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பதை அறிய ரயில்வே நிர்வாகம் விசாரணையை விரைப்படுத்தி உள்ளது.
பலர் பலி : இந்த படுபயங்கர விபத்தில், இதுவரை 233க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உலகத்தலைவர்கள் இரங்கல் : இந்த கோர விபத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர், பல்வேறு மாநில முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆழ்ந்த இரங்கல் : அதில், ஒடிசாவில் நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். உயிர்களைக் காப்பாற்ற இரத்த தானத்துக்கான அவசரத் தேவை இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உயிர்காக்கும் இரத்த தானத்தை செய்வதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு எனது ரசிகர்கள் மற்றும் அருகிலுள்ள நல்ல மனம் கொண்டோர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











