சிரஞ்சீவி மடி மேல் உட்கார்ந்து கொண்டு.. குதித்து குதித்து டான்ஸ்.. சூப்பர் பேத்தி!
சென்னை : தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி தனது பேத்தியுடன் விளையாடும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
நடிகர்கள் பிரபலங்கள் என்று அனைவரும் இந்த கொரன்டைன் நேரத்தை தங்களின் அன்பான உறவுகளோடு செலவிட்டு வருகின்றனர். இதே போல் தன் வீட்டில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் சிரஞ்சீவி தன் பேத்தியுடன் நடந்த ஒரு அன்பான நிகழ்வை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

தன் பேத்தியுடன் விளையாடிய நினைவு காணொளி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் சிரஞ்சீவி. இதில் பேத்தி நவிஷ்கா பாடல் ஒன்றை வைக்கச்சொல்லி அடம்பிடிக்க முதலில் மறுப்பு தெரிவிக்கும் சிரஞ்சீவி பேத்தியின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் இறுதியாக பாடலை வைத்து விடுகிறார். உடனே தொலைகாட்சியில் தன் தாத்தா சிரஞ்சீவியின் பாடலை ஆச்சரியமாக பார்த்து தன் தாத்தாவின் மடியில் இருந்த படியே ஆட முயற்சிக்கிறார் நவிஷ்கா.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியின் மேல் எப்போதும் இசையின் சக்தியை கண்டு பிரம்மித்தது உண்டு இந்த குழந்தை எப்படி இசையை கேட்டு மகிழ்ச்சி அடைந்து ஆட முயற்சிக்கிறது என்ற கூறியுள்ளார் சிரஞ்சீவி. மேலும் இது முன்னர் எடுத்த காணொளி என்றும் தற்போது நினைவாக பகிர்ந்ததாகவும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த நடிகை காஜல் அகர்வால் ஆச்சரியத்துடன் எவ்வளவு அபிமானமாக உள்ளது அழகான இணையத்தின் க்ரூவ்ஸ்டார் என்று புகழ்ந்திருக்கிறார். ரசிகர்கள் மட்டுமல்ல காஜல் போன்ற பிரபலங்களும் இந்த வீடியோ பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

சிரஞ்சீவி இறுதியாக சைரா நரசிம்ம ரெட்டி என்கிற வரலாற்று படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு சினிமா எதிர்பாராத படம் அது. இதே போல் அதற்கு முன் கத்தி படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார். பெரிதாக படங்களில் நடிக்காத சிரஞ்சீவி நல்ல கதைகள் தேடி வந்தால் மட்டும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











