குழந்தைங்க மேல இவ்ளோ ஆசை.. கடைசியில் தன்னோட குழந்தையை பார்க்காமல் போன சிரு.. வைரல் போட்டோ!

சென்னை: நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் அவரது மனைவி மேக்னா ராஜின் போட்டோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னட திரைத்துறையின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கடந்த 7 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவரது உடல் அவரின் சகோதரருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சர்ஜா, பெங்களூரு கனகாபுரத்தில் ஒரு பண்ணை வீட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி இருந்தார்.

பிடித்த இடம்

பிடித்த இடம்

அந்த வீடுதான் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு பிடித்த இடம் என்பதால் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த சிரஞ்சீவி சர்ஜா, தமிழில் வெளியான சண்டக்கோழி கன்னட ரீமேக் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பிரபல சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி சர்ஜா.

உலுக்கிய மரணம்

உலுக்கிய மரணம்

சிரஞ்சீவி சர்ஜாவின் தாத்தா பிரபல கன்னட நடிகரான சக்தி பிரசாத் ஆவார். சிருவின் மாமா, பிரபல நடிகரான அர்ஜூன் சர்ஜா ஆவார். சிருவின் சகோதரர் துருவா சர்ஜாவும் கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சிருவின் மரணம் கன்னட திரைத்துறையை உலுக்கிவிட்டது.

நீண்ட நாள் காதலி

நீண்ட நாள் காதலி

சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2018ஆம் ஆண்டுதான் தன்னுடைய நீண்ட நாள் காதலியான நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார். மேக்னா ராஜூம் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். கன்னட நடிகர் சுந்தர் ராஜ் - நடிகை பிரமிளா ஜோஷாயின் ஒரே மகள் ஆவார்.

பொருத்தமான ஜோடி

பொருத்தமான ஜோடி

மேக்னா ராஜ் தமிழிலும் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர்களின் திருமணம் முதலில் கிறிஸ்தவ முறைப்படியும் பின்னர் இந்து முறைப்படியும் நடந்து முடிந்தது. பொருத்தமான ஜோடியாக வலம் வந்தனர் இருவரும்.

கார்டியாக் அரெஸ்ட்

கார்டியாக் அரெஸ்ட்

மேக்னா ராஜ் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அகால மரணமடைந்தார். சிருவின் மரணத்திற்கு பிறகு அவரது பல போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கையில் குழந்தைகள்

கையில் குழந்தைகள்

அந்த வகையில் தற்போது சிரஞ்சீவி சர்ஜாவும் அவரது மனைவியான மேக்னா ராஜூம் இடுப்பில் ஆளுக்கொரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் சிரஞ்சீவி ஒருபக்கம் குழந்தையை மறுப்பக்கம் மனைவியையும் அணைத்தப்படி உள்ளார்.

பார்க்காமலே போய்விட்டார்

பார்க்காமலே போய்விட்டார்

இதேபோல் மேக்னா ராஜூம் ஒரு பக்கம் குழந்தையையும் மறுப்பக்கம் கணவரையும் அணைத்தப்படி உள்ளார். இருவரும் முகத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் குழந்தைகளை தூக்கி வைத்துள்ளனர். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு ஆசையாக இருந்த சிரு தனது குழந்தையை பார்க்காமல் போய்விட்டாரே என உருக்கமாக கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X