10 ஆண்டு காதல்.. ஒரு நொடியில் விட்டுச்சென்ற சிரு.. இந்த ஒரு வீடியோ போதும்.. அவர்களின் காதலை சொல்ல!

சென்னை: நடிகர் சிரஞ்சீவி சர்ஜா அகால மரணமடைந்த நிலையில் அவர் தனது மனைவியுடன் அன்யோன்யமாக இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி நெஞ்சை பிழிகிறது.

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிற்றுக் கிழமை திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். 39 வயதில் அவர் அகால மரணமடைந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது தம்பி துருவா சர்ஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவரது உடல் கடந்த திங்கள் கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜா குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு உருக வைக்கும் தகவல் வெளியாகி வருகிறது.

10 ஆண்டு காதல்

10 ஆண்டு காதல்

சிரஞ்சீவி சர்ஜா நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை மேக்னா ராஜ், வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த பிரமிளா ஜோஷாய்யின் மகள் ஆவார். மேக்னா ராஜும் சிரஞ்சீவி சர்ஜாவும் 10 ஆண்டுகளாக காதலித்தனர்.

திருமணம்

திருமணம்

இவர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூன் 2 ஆம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

போட்டோக்கள் வீடியோக்கள்

போட்டோக்கள் வீடியோக்கள்

இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர்கள் முதல் குழந்தையை எதிர்பார்திருந்த நிலையில் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து சிரஞ்சீவி சர்ஜாவும் அவரது மனைவி மேக்னா ராஜின் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

பந்தியில் அமர்ந்து..

பந்தியில் அமர்ந்து..

அந்த வகையில் இருவரும் ஒருவருக்கு முத்தம் கொடுத்த போட்டோக்கள் அவர்களின் திருமண போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை கலங்க செய்தது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மேக்னா ராஜ் பந்தியில் அமர்ந்து சாப்பிடுகிறார். அப்போது சிரஞ்சீவி சர்ஜாவும் அவரது தம்பியும் ஒவ்வொருவராய் விசாரிக்கின்றனர்.

கணவரின் தம்பிக்கும்..

கணவரின் தம்பிக்கும்..

சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மேக்னா, தனது கணவரை பார்த்ததும் அவரை அழைத்து ஊட்டி விடுகிறார். அப்போது, சிரஞ்சீவியின் தம்பி துருவா சர்ஜா, ஏதோ கேட்டுவிட்டு செல்ல.. பின்னர் அவரை அழைத்து அவருக்கும் ஊட்டி விடுகிறார் மேக்னா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எத்தனை ஆண்டுகள்..

எத்தனை ஆண்டுகள்..

இந்த ஒரு வீடியோவே போதும் அவர்கள் எவ்வளவு ஆத்மார்த்தமாய் குடும்பத்தினருடன் ஒருவருக்கு ஒருவர் அன்போடு பழகி இருக்கின்றனர் என்று. இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டியவர்கள்.. இப்படி அன்பான மனைவியை தவிக்கவிட்டு போய்விட்டாரே என அனுதாபப்பட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X