மூக்கு மேல் முத்தம் கொடுத்த மேக்னா.. வாழ்க்கையே அழகு என உருகிய சிரு.. நெஞ்சைப் பிழியும் போட்டோ!

சென்னை: மறைந்த இளம் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, தனது மனைவிக்காக உருகி போஸ்ட் செய்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னட சினிமாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவரான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிற்றுக் கிழமை தீவிர கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார்.

39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அகால மரணம்

அகால மரணம்

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்போது மேக்னா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் தங்களின் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சிரஞ்சீவி சர்ஜா அகால மரணமடைந்தார்.

கட்டியணைத்து..

கட்டியணைத்து..

கணவரின் திடீர் மரணத்தை ஜீரணிக்க முடியாத மேக்னா கதறியப்படியே இருந்தார். அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த போது கூட அடிக்கடி அவரது உடலை பார்த்தும் பற்றியும் கதறியப்படியே இருந்தார். கடைசியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு இறுதிச் சடங்கின் போதும் கணவரின் உடலை கட்டியணைத்தும், முகத்தில் முத்தம் கொடுத்தும் கதறினார் மேக்னா.

வைரலாகும் போட்டோ..

வைரலாகும் போட்டோ..

அவரை நடிகர் அர்ஜூன், மற்றும் நடிகர் துருவா சர்ஜா ஆகியோர் தேற்றினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா ஏற்கனவே தனது மனைவியுடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருந்ததும் அதற்கு அவர் கொடுத்த கேப்ஷன்களும் வைரலாகி வருகின்றனர்.

இளம் வயதில்..

இளம் வயதில்..

அவர் இறந்த நாள் முதலே அவர்களின் திருமண போட்டோக்கள் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இத்தனை இளம் வயதில் அவர் போக வேண்டுமா என உருக்கமாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் மேலும் சில போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாழ்க்கை அழகாய் இருக்கிறது

வாழ்க்கை அழகாய் இருக்கிறது

தனது மனைவி தனக்கு மூக்கின் மேல் முத்தம் கொடுக்கும் இந்த ரொமான்டிக் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சிரஞ்சீவி சர்ஜா. மேலும் அந்த போட்டோவுக்கு ரொம்ப நன்றி.. உன்னோடு இருப்பதால் வாழ்க்கை அழகாய் இருக்கிறது.. லவ் யூ.. என உருகி இருக்கிறார்.

மனைவிக்கு ஆசிர்வாதம்

மனைவிக்கு ஆசிர்வாதம்

தனது மனைவியுடன் இருக்கும் மற்றொரு போட்டோவை ஷேர் செய்துள்ள சிரஞ்சீவி, என் மனைவி கர்நாடக மாநில அரசின் விருதை பெருவதில் நான் பெருமை படுகிறேன். என் மனைவிக்கும் எங்களின் குடும்பத்திற்கும் உங்களின் அன்பும் ஆதரவும் தேவை என பதிவிட்டு தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மெழுகுவர்த்தி..

மெழுகுவர்த்தி..

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்ற சொன்ன போது தனது மனைவியுடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியப்படி சேர்ந்து எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் ஸ்டே சேஃப் ஸ்டே ஹோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

உயிரோடு இருந்தபோது..

உயிரோடு இருந்தபோது..

இதேபோல் ரம்ஜான் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து தனது மனைவி மீதான காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். சிரஞ்சீவி சர்ஜா உயிரோடு இருந்தபோது தனது மனைவியுடன் ஷேர் செய்த ஒவ்வொரு போட்டோவும் அவர் மீதான அன்பையும் காதலையும் சொல்லும் வகையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X