போய்விட்டீர்கள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை..மிஸ் பண்ணுவோம் அண்ணா.. நடிகர் சிருவின் தம்பி உருக்கம்!
சென்னை: நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் தனது அண்ணன் தங்களை விட்டு போய்விட்டார் என்பதை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார்.
39 வயதான சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் கன்னடத் திரைத்துறையை மட்டுமின்றி தென்னிந்திய திரைத்துறையை உலுக்கியது.

திடீர் மரணம் - சோகம்
அவரது மனைவியான நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் சிரஞ்சீவி மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது திடீர் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரது உறவினர்களும் நண்பர்களும் கலங்கி நிற்கின்றனர்.

லாக்டவுன் நேரத்தில்
சிரஞ்சீவி சர்ஜா மரணமடைந்த நிலையில் அவரது போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை கசக்கி வருகிறது. கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிரஞ்சீவி சர்ஜா, லாக்டவுன் நேரத்தில் அவர்களுடன் விளையாடிய வீடியோக்களும் தீயாய் பரவி வருகிறது.

இதயத்தை நொறுக்கும்..
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் சூரஜ் சர்ஜா இதயத்தை நொறுக்கும் ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் சிரஞ்சீவி சர்ஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் கடைசியாக பதிவிட்ட போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார்.

ஒரே மாதிரியாக இருக்கிறோம்
சிரஞ்சீவி சர்ஜா தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, தனது சகோதரர்களுடன் சேர்ந்து சிறுவயதில் எடுத்த போட்டோவை போன்று மீண்டும் எடுத்து ரீகிரியேட் செய்திருந்தார். அதற்கு அப்போதும் இப்போதும்.. நாங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறோம்.. என்ன சொல்கிறீர்கள் தோழர்களே.. என கேட்டு கேப்ஷன் கொடுத்திருந்தார்.

மிஸ் பண்ணுவோம்..
அந்த பதிவை தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ள சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் சூரஜ் சர்ஜா, அவர் எங்களை விட்டு போய்விட்டார் என்பதையும் இதுவே அவரது கடைசி பதிவாக இருக்கும் என்பதையும் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. உங்களை மிஸ் பண்ணுவோம் பிரதர்.. விவரிக்க வார்த்தை இல்லை என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தைரியமாக இருங்கள்
அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது என்றும், உங்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. இப்படி ஒரு பேரிழப்பை தாங்கிக்கொள்ள கடவுள் உங்களுக்கு பலத்தையும் தைரியத்தையும் கொடுக்க வேண்டும் என ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











