கர்ப்பிணி மனைவியை விட்டுச்சென்ற நடிகர் சிரு.. கடைசி இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்து கதறும் ஃபேன்ஸ்!
சென்னை: கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டுச் சென்ற நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் கடைசி இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் கதறி வருகின்றனர்.
Recommended Video
கன்னட சினிமாவின் பிரபல ஹீரோவான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நேற்று முன்தினம் கடுமையான நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பெங்களூரு ஜெயாநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

உலுக்கிய மரணம்
39 வயதான அவரது மரண செய்தி தென்னிந்திய திரைப்படத்துறையே உலுக்கியது. திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் பலரும் அவரது மறைவுக்கு அதிர்ச்சியையும் இரங்கலையும் வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் பசவங்குடியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பண்ணை வீட்டில் அடக்கம்
அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் சிரஞ்சீவி சர்ஜாவின் உடல், துருவா சர்ஜாவின் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கடைசி இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக அதாவது கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போஸ்ட் தான் அவர் கடைசியாக போஸ்ட் செய்தது. அதில் சிறுவயதில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோவையும் தற்போது அதேபோன்று ரீகிரியேட் செய்து எடுத்த போட்டோவையும் ஒன்றாக ஷேர் செய்துள்ளார்.

ஒரே மாதரியாக இருக்கிறோம்
மேலும் அந்த போட்டோவுக்கு, அப்போதும் இப்போதும்.. நாங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறோம்.. என்ன சொல்கிறீர்கள் தோழர்களே.. என கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பலரும்.. வாவ் 20 வருடங்களுக்கு பிறகும் அப்படியே இருக்கிறீர்கள்.. பார்ப்பதற்கு அருமையாக உள்ளது என தெரிவித்திருந்தனர்.

கண்ணீர்மல்க..
இந்நிலையில் அதுவே அவரது கடைசி பதிவானதால் நேற்று முதல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.. கடவுள் மிகவும் கொடூரமானவன் என்றும் தங்களின் ஆதங்கத்தை அதிர்ச்சியைம் கண்ணீர்மல்க பதிவிட்டு வருகின்றனர். அவரது கடைசி பதிவான அந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு வருவதோடு விரும்பப்பட்டும் வருகிறது.

கர்ப்பிணி மனைவி
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு நடிகை மேக்னா ராஜுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. தற்போது கர்ப்பிணியாக உள்ளார் மேக்னா ராஜ். இருவரும் குழந்தையை எதிர்பார்த்திருந்த நிலையில் கர்ப்பிணி மனைவி தனியே தவிக்க விட்டு சென்றுவிட்டார் சிரஞ்சீவி சர்ஜா.


Click it and Unblock the Notifications











