விஜய் பாட்டுக்கு அசத்தலாய் டிக்டாக் செய்த சிரஞ்சீவி சர்ஜா.. இறப்புக்கு பிறகு வைரலாகும் வீடியோ!

சென்னை: மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தமிழ் டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

வைரலாகும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் டிக்டாக் வீடியோ.. கதறும் ஃபேன்ஸ்!

கன்னட சினிமாவின் பிரபல ஹீரோக்களிர் ஒருவரான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிற்றுக் கிழமை கடுமையான நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பெங்களூரு ஜெயாநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி குடும்பத்தினர் தலையில் இடியை இறக்கினர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

சினிமா குடும்பம்

சினிமா குடும்பம்

39 வயதான நகடிர் சிரஞ்சீவி சர்ஜா, நடிகர் அர்ஜூனின் மருமகன் ஆவார். அதாவது அவரின் சகோதரியின் மகன் ஆவார். சிரஞ்சீவி சர்ஜாவின் தாத்தா பிரபல கன்னட நடிகரான சக்தி பிரசாத் ஆவார். அவரது சகோதரர் துருவா சர்ஜாவும் கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஆவார்.

கர்ப்பிணி மனைவி

கர்ப்பிணி மனைவி

சிரஞ்சீவி சர்ஜா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார். தனது பெற்றோர், மனைவி, சகோதரர்கள் என சந்தோஷமனா வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரது மனைவி மேக்னா ராஜ் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அவர்கள் விரைவில் குழந்தையை எதிர்பார்த்திருந்தனர்.

அதிர்ச்சி இரங்கல்

அதிர்ச்சி இரங்கல்

இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜா அகால மரணமடைந்தது அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி திரைத்துறை மற்றும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் பலரும் அவரது மறைவுக்கு அதிர்ச்சியையும் இரங்கலையும் வெளிப்படுத்தினர்.

பண்ணை வீட்டில் அடக்கம்

பண்ணை வீட்டில் அடக்கம்

இதனை தொடர்ந்து அவரது உடல் பசவங்குடியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து திங்கள் கிழமை பிற்பகல் சிரஞ்சீவி சர்ஜாவின் உடல், துருவா சர்ஜாவின் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அதில் நான் சர்க்கவர்த்தியாடா..

இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜாவின் டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் கலங்க வைத்து வருகிறது. அதாவது எப்படிடா இவ்வளவு கஷ்டத்துலேயும் சிரிக்கிற என கேட்கும் குரலுக்கு, சிரித்தப்படியே அதில் நான் சர்க்கவர்த்தியாடா என்ற சிவாஜியின் டயலாக்கை பேசுகிறார்.

லைஃப் இஸ் வெரி ஷார்ட்

லைஃப் இஸ் வெரி ஷார்ட்

அப்படின்னா.. புரியலையே என்று ஒரு குரல் சொல்ல லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா.. ஆல்வெஸ் பீ ஹேப்பி என விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை பாடியிருக்கிறார். அவர் ஏற்கனவே செய்த இந்த டிக்டாக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் கலங்கி போய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X