கடைசி ஆசை நிறைவேறாமலேயே உயிரை விட்ட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா.. மனதை உலுக்கும் வாட்ஸ் அப் சேட்!
சென்னை: நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தனது கடைசி ஆசை நிறைவேறாமலேயே உயிரை விட்டுள்ளார்.
Recommended Video
நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கன்னட சினிமாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவர். பிரபல நடிகர் அர்ஜூனின் சகோதரியின் மகன் ஆவார்.
இவர் கன்னட சினிமாவில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மூன்று படங்களில் நடித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை
லாக்டவுன் காரணமாக அந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கடுமையான நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக பெங்களூரு ஜெயாநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கார்டியாக் அரெஸ்ட்
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

4 மாத கர்ப்பிணி மனைவி
பின்னர் அவரது உடல், அவருக்கு பிடித்தமான தனது தம்பியின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார். தற்போது மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

நெஞ்சை பிழிந்த வீடியோ
கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் கர்ப்பிணியான மேக்னா ராஜ், சிரஞ்சீவி சர்ஜாவின் உடலை கட்டியணைத்து கதறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது தாய் மாமாவான அர்ஜூன் மற்றும் சகோதரரான துருவா சர்ஜா ஆகியோரும் உடலை அணைத்து கதறிய வீடியோக்களும் வெளியாகி நெஞ்சை பிழிந்தது.

வாட்ஸ் அப் சேட்
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின், கடைசி ஆசை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தனது நண்பரான பிரஜ்வால தேவ்ராஜிடம் வாட்ஸப்பில் சேட் செய்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை கலங்க வைத்துள்ளது.

ஒரு வாரம் டூர்..
அதில் ஐ லவ் யூ கய்ஸ் என்று கூறியுள்ள, நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, நாம் இந்த லாக்டவுனுக்கு பிறகு ஒரு வாரம் டூர் செல்ல வேண்டும். நாம் மட்டும்தான் நண்பர்களே.. நாம் இழந்தவைகள் குறித்து பேசலாம்.. என்னை நம்புங்கள் நாம் ஒன்றாக இருப்பதை விட விலைமிக்கக்கூடியது ஒன்றும் இல்லை..

நாளைக்கு என்னாகுமோ..
நாளைக்கு நமக்கு என்ன ஆகும் என்று தெரியாது.. என ஹார்ட்டின்களை பதிவிட்டு தனது கான்வெர்சேஷனை முடித்துள்ளார். அவரது இந்த கான்வெர்சேஷனை பார்த்த நெட்டிசன்கள், கடைசி ஆசைக் கூட நிறைவேறாமல், இத்தனை இளம் வயதில் இறந்துவிட்டாரே என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.

முன்னரே அறிந்திருந்தாரோ..
மேலும் நாளைக்கு நமக்கு என்ன ஆமோ என அவர் குறிப்பிட்டிருந்தது அவரது ரசிகர்களை கலங்கச் செய்துள்ளது. தெரியாத்தனமாக ஃபுளோவில் வந்த வார்த்தை என்றாலும் அவரது மரணம் குறித்து முன்னரே அறிந்திருந்தாரோ என உருகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











