சிம்பு மீது மூத்த பிரபலத்துக்கு இவ்வளவு அக்கறை.. எஸ்டிஆர் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்!
சென்னை: இளம் தலைமுறையில் சிம்புதான் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கியவர். அவர் காலகட்டத்தில் அறிமுகமான தனுஷ், அவருக்கு பின் அறிமுகமான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் மார்க்கெட்டலாம் எஸ்டிஆரைவிடவும் கொஞ்சம் அதிகம்தான் இருக்கிறது. இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் அவர் பழைய ஃபார்மில் வருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் மீது சித்ரா லட்சுமணன் அக்கறை காட்டியிருக்கிறார்.
சினிமாவுக்கு யாரின் துணையுமின்றி தனது தன்னம்பிக்கை, திறமையால் மட்டும் வந்து வளர்ந்து காட்டியவர் டி.ராஜேந்தர். அவரது மகன் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக மாறினார். அவர் சென்ற வேகத்தை பார்க்கும்போது கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய ஸ்டாராக உருவெடுப்பார் என்றுதான் ஒருதரப்பினர் ஆணித்தரமாக நம்பினார்கள். அதற்கேற்றபடிதான் அவரும் அப்போதைக்கு இருந்தார்.
பெர்சனல் பிரச்னைகள்: கமல்ஹாசன் எப்படி காதல் வாழ்க்கையில் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டாரோ அதே அளவுக்கு சிம்புவும் கிசுகிசுக்கப்பட்டார்; காதல் தோல்விகளிலும் சிக்கினார். நயன்தாராவுடனான காதலும் பிரேக் அப்பும் அப்போதைக்கு கோலிவுட்டின் தலைப்பு செய்திகளாக இருந்தன. அந்த விஷயத்தில் சிம்பு மீது பலர் விமர்னம் வைத்தார்கள். அதனை அவர் துளிகூட காதில் போட்டுக்கொள்ளவில்லை. கமல்ஹாசனின் கட்ஸ் அவரிடமும் தென்பட்டது.

அதில் மட்டுமல்ல: கட்ஸில் மட்டுமில்லாமல் கமல் எப்படி சினிமாவின் பல ஜானர்களில் புகுந்து விளையாடுவாரோ அதே அளவுக்கு சிம்புவும் செய்தார். இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, இசை என பல்துறை வித்தகராக விளங்கினார். அப்படிப்பட்ட சூழலில் ஹன்சிகாவை காதலித்து பிரேக் அப் செய்த அவர்; ஆன்மீக வழியில் சென்றார். ஒருகட்டத்தில் இனி சிம்பு தமிழ் சினிமாவில் இல்லை என்ற நிலை உருவானது.
தரமான கம்பேக்: சூழல் இப்படி இருக்க தனது உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி நடிக்க ஆரம்பித்த அவர் மாநாடு படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். அந்தப் படத்திலிருந்து அவரது செகண்ட் இன்னிங்ஸ் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதிக படங்களில் இப்போதைக்கு சிம்பு நடிக்க ஆரம்பித்திருந்தாலும் இந்த வேகம் போதவில்லை என்பதே திரைத்துறை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
சித்ராவின் அட்வைஸ்: இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல திறமைகளை கொண்டிருக்கும் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் சிம்பு குறித்து பேசிய அவர், "சிம்புவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்படி இருந்தும் இவர் 23 ஆண்டுகளில் 26 படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். இவருக்கு பின் 2010ஆம் ஆண்டு அறிமுகமான விஜய் சேதுபதி 15 ஆண்டுகளில் 50 படங்கள் நடித்துவிட்டார். சிம்புவோடு அறிமுகமான தனுஷும் 51 படங்கள் நடித்துவிட்டார்.
இதெல்லாம் கடமை: இதையெல்லாம் சிம்புவிடம் அவரது நலம் விரும்பிகள் சொல்ல வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போது தன்னுடன் ஓடுபவர்களை கவனிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓடி என்ன பயன்?.. சிம்புவால் ஓட முடியாது வெல்ல முடியாது என்று இருந்தால் பரவாயில்லை; அவர் சிக்ஸர் அடிக்கும் பேட்ஸ்மேன்; மட்டையை தொடமாட்டேன் என்று சொன்னால் அவர் மீது விமர்சனம் எழாமல் இருக்குமா?.. சிம்பு மீதான விமர்சனத்தை சிம்புவுக்கு எதிரானது என்று அவரோ அவரை சார்ந்தவர்களோ பொருள் கொள்ளக்கூடாது" என அக்கறையுடன் பல விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











