அய்யய்யோ விக்ரமுக்கு என்னாச்சு.. தங்கலான் படத்திற்காக மொத்தமாக மாறிட்டாரே!

சென்னை: தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி, இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

Actor Chiyaan Vikram shared thangalaan movie shooting spot photos

தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

விக்ரமுக்கு என்னாச்சு: இந்த நிலையில் விக்ரம் தற்போது பூரண குணம் அடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். படப்பிடிப்பின் போது, மேக்கப் போட்டு தயாராகும் வீடியோவை விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விக்ரமின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது போல மேக்கப் போடப்பட்டுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ விக்ரமுக்கு என்னாச்சு என பதறிப்போய் கேட்டு வருகின்றனர்.

மதுரையில் படப்பிடிப்பு: தங்கலான் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்கும் என்றும், இதோடு மொத்த படப்பிடிப்பையும் பா ரஞ்சித் முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Actor Chiyaan Vikram shared thangalaan movie shooting spot photos

ரஞ்சித்தின் கனவு படம்: தங்கலான் திரைப்படம் இயக்குநர் ரஞ்சித்தின் கனவு படம், 1870-ஆம் ஆண்டு முதல் 1940-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தை தங்கலான் நமக்கு காட்டும். கோலார் தங்க சுரங்கம் எப்படி உருவானது, அதில் தங்கலானின் பங்கு என்ன என்பதை இந்தப் படம் பேசுகிறது. இந்த படத்திற்காக விக்ரம் கடுமையாக உழைத்து இருக்கிறார்.

ஐந்து மணி நேரம் மேக்கப்: சமீபத்தில் மாளவிகா மோகனன் தங்கலான் படத்திற்கு ஐந்து மணிநேரம் மேக்கப்போடும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மேக்கப் மற்றும் காஸ்ட்யூமிற்காக 5 மணி நேரம் அசையாமல் அமர்ந்து இருந்தது சவாலாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார். இப்படத்தின் டிரைலரைப் பார்த்து மிரண்டு போன பேன்ஸ் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X