லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சீயான் விக்ரம்..ஆரம்பமே மாஸ் என்ட்ரி..குஷியில் ரசிகர்கள் !

சென்னை : பிரபல நடிகர் விக்ரம் ட்விட்டரில் முதல் முதலாக இணைந்து அட்டகாசமான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். 1990-ல் வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இயக்குநர் பாலாவின் சேது திரைப்படம் விக்ரமின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.தொடங்கி பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் விக்ரம்.

விக்ரம்

விக்ரம்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் ஆகஸ்ட் 31ந் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 20 கெட்அப்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

புதிய படத்தில்

புதிய படத்தில்

பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பா.ரஞ்சித்துடன் முதன் முறையாக இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இணைகிறார்

ட்விட்டரில் சீயான்

ட்விட்டரில் சீயான்

இந்நிலையில், நடிகர் விக்ரம் ட்விட்டரில் இணைந்தது மட்டும் இல்லாமல், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், ஹாய் எல்லாருக்கும் வணக்கம், நான் தான் சீயான் விக்ரம். நிஜமாகவே நான் தான் மாறு வேஷத்தில் இல்லை. இந்த தாடி ரஞ்சித் படத்திற்காக வைத்தது. அந்த படத்திற்கு ரெடியாகிட்டு இருக்கேன் அதற்காக தான் இந்த கெட்டப் மாறுவேஷம் கிடையாது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சீயான்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சீயான்

ட்விட்டரில் இணைந்தால் நிறைய விஷயத்தை ரசிகர்களுக்கு சொல்லிடலாம் என்று அனைவரும் சொன்னாங்க. இருந்தாலும், 10,15 வருஷம் கழித்து ரொம்ப லேட்டா வந்து இருக்கிறேன். இருந்தாலும் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன். இதையெல்லாத்தையும் விட, இணையதளத்தில் அவ்வளவு அன்பு நமக்காக காத்துட்டு இருக்கு என்று அனைவரும் சொல்லி நான் கேள்விபட்டு இருக்கிறேன். அதை நாமும் கொஞ்சம் அனுபவிக்கலாமே என்று தான் ட்விட்டரில் இணைந்து உள்ளதாக அழகாக வீடியோவில் பேசி உள்ளார். இந்த வீடியோ பதிவிட்ட சிறிது நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை பெற்று டிராண்டாகி வருகிறது. ட்விட்டரில் இணைந்த விக்ரமுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னத்தின் சீரிய முயற்சியில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆதித்யா கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்தபடத்தைத திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X