போலீஸ் வேலையை விட்டுவிட்டு.. பொய் சொல்லி மனைவி நகைகளை அடமானம் வைத்த நடிகர்.. சினிமாவுக்காக இப்படியா?

சென்னை: சினிமா என்பது பலருக்கும் கனவான விஷயமாக இன்றைக்கும் உள்ளது. பலர் சினிமாவில் சாதிக்க தங்களது வாழ்க்கையில் ரொம்பவும் ரிஸ்க்கான முயற்சிகளை தங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில் நடிகரும் இயக்குநருமான தமிழ் தான் பணியாற்றி வந்த போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சினிமாவில் பணியாற்ற முழு நேரமாக முயற்சித்துள்ளார். அது தொடர்பாக அவர் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் இன்றைக்கு இயக்குநராகவும் நடிகராகவும் விளங்குபவர், தமிழ். டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ், ஜெய் பீம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார். மேலும் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் வெற்றி மாறனின் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து அவரது படங்களில் நடித்தும் வருகின்றார், பணியாற்றியும் வருகின்றார்.

tamizh vetrimaaran viduthalai part 2

இவரது இயக்கத்தில் வெளியான டாணாக்காரன் படம் பெரும் கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல், காவல் துறையில், நடைபெறுவதை அப்பட்டமாக காட்டியதாக பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் காவல்துறைக்குள் நுழைய முயற்சி செய்யும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கு கொடுக்கப்படும் தொல்லைகள், அரசு அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வசதிகள் என பலவற்றையும், அந்தப் படம் அப்பட்டமாக காட்டியது.

தமிழ்: இந்தப் படத்திற்காக தமிழ் பெரும் பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது வெளியாகியுள்ள விடுதலை பாகம் 2இல் மிகவும் மோசமான சந்தர்ப்பவாத காவல்துறை அதிகாரியாக நடித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். இவர் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் காவல்துறை அதிகாரியாகத்தான் நடித்துள்ளார். அதேநேரத்தில், இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர், காவல்துறையில்தான் பணியாற்றிக்கொண்டு இருந்துள்ளார்.

போலீஸ் வேலை: காவல்துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்த அவர் எப்படி சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறித்து அவரே தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இது தொடர்பாக அவர் பேசுகையில், “ சினிமாவுக்காக எனது காவல்துறை வேலையை விட்டுவிட்டேன். நான் காவல்துறை வேலையை விட்டது, எனது மனைவிக்கும் குடும்பத்திற்கும் தெரியாது. என்னுடைய மனைவி, குழந்தைகள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ளார்கள்.

வெற்றி மாறன்: குடும்பச் செலவுக்காக சென்னையில் பல வேலைகள் செய்திருக்கின்றேன், கேப் எல்லாம் ஓட்டியிருக்கின்றேன். இடம் வாங்கப்போறேன் என மனைவி நகையை அடமானம் வைத்து இரண்டு ஆண்டுகள் சமாளித்தேன். ஒரு வருடம் தீவிரமாக திட்டம்போட்டு வேலை செய்தேன். வெற்றி மாறன் அண்ணன்கிட்ட சேர்ந்த பின்னர் என்னுடைய சினிமா கனவு நனவாச்சு. இப்போது என் மனைவிக்கு எல்லாவற்றையும் இரண்டு மடங்காக வாங்கிக் கொடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X