twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகரும் இயக்குநருமான விசு காலமானார்.. அதிர்ச்சியில் தமிழ் திரைத்துறையுலகம்! #visu

    |

    சென்னை: இயக்குநரும் நடிகருமான விசு உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

    Recommended Video

    Actor Visu Passed Away | நடிகர் விசு உடல் நலக் குறைவால் காலமானார்

    நடிகர் விசு 1945ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார். அவரது முழுப் பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் ஆகும்.

    சுருக்கமாக விசு என அழைக்கப்பட்டு வந்தார். எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர் விசு.

    உதவி இயக்குநர்

    உதவி இயக்குநர்

    இயக்குநர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து இயக்குநரானவர் விசு. அப்போதே சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு படம்தான். அந்த படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

    மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

    டிவி நிகழ்ச்சிகள்

    டிவி நிகழ்ச்சிகள்


    பின் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்குனாராக அறிமுகமானார். மேலும் மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் விசு.

    இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் சிங்கமணி ரங்கமணி. விசு சீரியல்களில் நடித்ததோடு டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

    அரட்டை அரங்கம்

    அரட்டை அரங்கம்

    விசு தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அவரின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியே முன்னோடி என கூறலாம். அந்த அளவுக்கு பிரபலமானது விசுவின் அரட்டை அரங்கம்.

    மூன்று மகள்கள்

    மூன்று மகள்கள்

    விசுவிற்கு உமா என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பனா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர். அவர்களில் லாவண்யா மட்டும் சென்னைக்கு திரும்பி தந்தை விசுவுக்கு தொழிலில் உதவியாக இருந்து வந்தார்.

    உயிர் பிரிந்தது

    உயிர் பிரிந்தது

    வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணமாக நடிப்பு இயக்கம் என எல்லாவற்றில் இருந்தும் ஒதுங்கி வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார் விசு. கடந்த சில நாட்களாக சிறு நீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.

    சம்சாரம் அது மின்சாரம்

    சம்சாரம் அது மின்சாரம்

    அவரது இறப்பு செய்தியைக் கேட்டு திரைத்துறையினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாராம் படம் பல மொழிகளில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றிப் பெற்றது. மணல் கயிறு, திருமதி ஒரு வெகுமதி, டவுரி கல்யாணம், புதிய சகாப்தம், அவள் சுமங்கலிதான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

    பேரிழப்பு

    பேரிழப்பு

    நடிகர் ரஜினியுடன் மன்னன், அருணாச்சலம், உழைப்பாளி மிஸ்டர் பாரத், உழைப்பாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான வெற்றிப்படங்களையும் குடும்பப்படங்களையும் கொடுத்துள்ள விசுவின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Read more about: visu விசு
    English summary
    Actor come director Visu passes away at the aged of 74. He died due to kidney problem.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X