பொண்ணுங்களை அரையும் குறையுமா ஆடவிடுவது தான் பிக்பாஸ்...கூல் சுரேஷ் சர்ச்சை பேச்சு!

சென்னை : பொண்ணுங்களை அரையும் குறையுமா ஆடவிடுவது தான் பிக்பாஸா என கூல் சுரேஷ் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும்,ரசிகராகவும் தன்னை காட்டிக் கொண்டார்

வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்காக களம் இறங்கி வெந்து தணிந்தது காடு..சிம்புக்கு வணக்கத்தை போடு என கூவு கூவுனு கூவி பட்டிதொட்டி எங்கும் பிரபரமானார்.

கூல் சுரேஷ் சர்ச்சை பேச்சு

கூல் சுரேஷ் சர்ச்சை பேச்சு

இந்நிலையில், பிக் நிகழ்ச்சி பற்றி அவர் பேசி உள்ள கருத்து சோஷியல் மீடியாவில் சர்ச்சையாகி உள்ளது. அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் செய்தியாளர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து போய் இருக்கிறார் உங்களை கூப்பிடவில்லையா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், தயவு செய்து பிக் பாஸ் பத்தி பேசாதீங்க மனசு கொதிச்சி போய்இருக்கு.

அரையும் குறையுமா ஆடவிடுவதா பிக் பாஸ்

அரையும் குறையுமா ஆடவிடுவதா பிக் பாஸ்

என்னங்க பிக் பாசு... காலையில பாட்டு போட்ட உடனே சின்ன சின்ன பொண்ணுங்களை அரையும் குறையுமா ஆடவிடுவது தான் பிக்பாஸா? இதைப்பார்க்க நான் போகனுமா? நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்...நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக மாட்டாங்க என்றார். உடனே ஒரு செய்தியாளர் அப்போ உள்ளே இருப்பவர்கள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லையா? என கேட்க அதுபற்றி எனக்குத் தெரியாது நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் அவ்வளவு தான் என்றார்.

ஓவர் கவர்ச்சி

ஓவர் கவர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவர் கவர்ச்சி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பசங்க ஜொள்ளுவிட்டு பார்ப்பதற்கு இதுதான் காரணம். ஜிபி முத்துவை உள்ளே இருப்பவர்கள் டார்கெட் செய்கிறார் என்ற கேள்விக்கு முன்னேறினாலே பலர் நம்மை டார்கெட் செய்வார்கள் இதனால்,நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் என்று ஜிபி முத்துக்கு ஆதரவாக பேசினார். இருப்பினும் கூல் சுரேஷ் இவ்வாறு பேசி உள்ளது சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

பிக்பாஸ்க்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல், உலகநாயகன் கமலஹாசனே 6 சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதில் கலந்து கொண்ட பலர் திரையில் நடிகராகும் வாய்ப்புகள் கிடைத்து பல படங்களில் நடித்து வருகிறார்கள்.ஆனால், கூல் சுரேஷ் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகமாட்டார்கள் என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X