ஓரம் போ.. ஓரம் போ.. வடக்குப்பட்டி ராமசாமி படம் பார்க்க பாடையில் வந்த கூல் சுரேஷ்!

சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு முன்னணி நடிகர்கள் பலரின் படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில் இன்று மட்டும் நான்கு தமிழ் படங்கள் திரைக்கு வந்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பொங்கல் பண்டிகையொட்டி தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அதன் பின்னர், அடுத்தடுத்த வாரங்களில் சிறிய படங்கள் மட்டுமே வெளியான நிலையில், இம்மாதத்தின் முதல் வாரமான இன்று சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி, வித்தார்த்தின் டெவில் மற்றும் மறக்குமா நெஞ்சம், சிக்லெட்ஸ் என நான்கு படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இன்று சந்தானத்தின் வடக்கு பட்டி ராமசாமி படம் உலகம் முழுவதும் 600 திரைகளில் வெளியானது.

actor cool suresh comes in funeral vehicle for vadakkupatti Ramasamy movie

வடக்குப்பட்டி ராமசாமி: தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் சந்தானம். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம் ரவி, பாஸ்கர், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பீப்பிள் மீடியா, நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

விளக்கம் கொடுத்த சந்தானம்: இப்படத்தின் டிரைலர் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. அதில், இடம்பெற்ற கடவுள் இல்லைன்னு சொல்வானே ராமசாமி அவனா என்ற வசனம் சர்ச்சையாகி இணையத்தில் சந்தானத்திற்கு எதிராக பல மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த சந்தானம், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விளக்கம் அளித்தார். இந்த திரைப்படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை, முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

பாடையில் வந்த கூல் சுரேஷ்: இதையடுத்து, இன்று வெளியாகி உள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. இந்த படத்தை பார்க்க வந்த கூல் சுரேஷ் பாடையில் படுத்துக்கொண்டு சந்தானத்தின் போட்டோவை கையில் வைத்துக்கொண்டு, மேளதாளத்துடன் போஸ் கொடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், வெந்து தணிந்தது காடு சிம்புக்கு வணக்கத்தை போடு என்று பேசியே பிரபலமானார். பத்து தல திரைப்படத்தை பார்த்த கூல் கூரேஷ் ஹெலிகாப்டரிலும், பொன்னியின் செல்வன் படம் பார்க்க குதிரையில் வந்திருந்தார் கூல் சுரேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X