Cool Suresh: கிழிந்த உடையுடன் ஆடிய தமன்னா.. புதிய ட்ரஸ் கொண்டுவந்த கூல் சுரேஷ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள ஜெயிலர் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் தமன்னா உள்ளிட்டவர்களின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Actor Cool Suresh criticise Tamannaahs dress in Jailer movie Kaavaala song

கிழிந்த உடையுடன் ஆடிய தமன்னாவிற்கு புதிய உடை கொண்டு வந்த கூல் சுரேஷ்: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகியுள்ளது ஜெயிலர் படம். அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் இன்றைய தினம் ஜெயிலர் படம் ரிலீசாகியுள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்தப் படம் உலகளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் பாதி மிகவும் சிறப்பாகவும் இரண்டாவது பாதி சில லாஜிக் மீறல்களுடன் சராசரிக்கும் அதிகமாகவும் உள்ளதாக ஜெயிலர் படத்தின் விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இந்தப் படத்திற்கான பிரமோஷன்களை படக்குழுவினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் மட்டுமில்லாமல் உலகளவில் ஜெயிலர் ஃபீவர் ரசிகர்களை அதிகமாக பற்றியது. முதலில் இந்தப் படத்தின் காவாலா பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடலில் தமன்னா, ரஜினி ஆட்டம் போட்டிருந்தனர். இந்தப் பாடலில் குறிப்பாக தமன்னாவின் ஆட்டம் சர்வதேச அளவில் ரீச்சானது.

Actor Cool Suresh criticise Tamannaahs dress in Jailer movie Kaavaala song

பாடலில் அவரது கெட்டப்பும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அவர் கிழிந்த ஸ்கர்ட்டுடன் நடித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தை பார்க்கவந்த நடிகர் கூல் சுரேஷ், தான் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலை பார்க்க வந்ததாகவும் ஆனால் பாடலில் கிழிந்த உடையுடன் தமன்னா ஆடியுள்ளது தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தமன்னாவிற்கு புதிய கிழியாத ஸ்கர்ட்டை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

தன்னுடைய தங்கை போன்றவர் தமன்னா என்றும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்திலேயே தான் புதிய கிழியாத ஸ்கர்ட்டை கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு அனைவரின் பங்களிப்பும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அனைவரும் ரசிகர்களாக உள்ளதாகவும், அவரது படத்தை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X