twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு ரிலீஸ் தாமதமானதால்…திரையரங்க வாசலில் தேம்பி தேம்பி அழுத நடிகர் !

    |

    சென்னை : சிம்புவின் மாநாடு திரைப்படம் கேடிஎம் பிரச்சினையால் வெளியாக தாமதமானதால், நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ் திரையரங்க வாசலில் தேம்பி தேம்பி அழுதார்.

    Recommended Video

    Maanadu Audience Opinion | Simbhu, Venkat Prabhu, SJ Suryah

    சிம்புவின் நண்பரான இவர் அவருடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    தட்டித் தூக்கிய சிம்பு... இது வேற லெவல் “மாநாடு“ ... ட்விட்டர் விமர்சனம் !தட்டித் தூக்கிய சிம்பு... இது வேற லெவல் “மாநாடு“ ... ட்விட்டர் விமர்சனம் !

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் , வெள்ளக்கார துரை, நண்பேன்டா போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

    இன்று ரிலீஸ்

    இன்று ரிலீஸ்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

    சிக்கல் தீர்ந்தது

    சிக்கல் தீர்ந்தது

    மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார். அதன்பிறகு சிம்பு குடும்பத்தினர் சிக்கலை தீர்க்க முடிவு செய்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு திட்டமிட்டபடி மாநாடு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    5 மணி காட்சி ரத்து

    5 மணி காட்சி ரத்து

    ஆனால், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் காலை 5 மணி காட்சி ரத்தானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காலை 8 மணிக்கு கேடிஎம் வழங்கப்பட்டு மாநாடு படம் திரையரங்குகளில் வெளியானது.

    தேம்பி அழுத

    தேம்பி அழுத

    இந்நிலையில், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் வெளியாக தாமதம் ஏற்பட்டதால், படத்தை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் திரையரங்க வாசலில் காத்து இருந்தார்கள்.அப்போது நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் கதறி அழுதுக்கொண்டு, ஒரு திரைப்படம் வெளியாவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?

    எல்லாமே சிம்புக்காகதான்

    நான் சிம்புவுக்கு சப்போர்ட் செய்ததால் பல பட வாய்ப்பு தனக்கு வராமல் போனதாகவும், எங்க போனாலும் சிம்புவுக்கு சொம்பு தூக்குரவனு சொல்லுவாங்க நான் நிறைய அவமானப்பட்டு இருக்கேன். இருந்தாலும் எல்லாத்தையும் நான் சிம்புக்காக தாங்கிக்கிட்டேன். எனக்கு ஒன்னுனா சிம்பு வருவார் என்று கூறிக்கொண்டே கதறி அழுதார்.

    English summary
    Comedy Actor Cool Suresh cyring for Maanaadu release delay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X