பல் விளக்கிக் கொண்டே ரிவ்யூ.. கக விஜய்சேதுபதி.. கூல் சுரேஷின் அட்ராசிட்டி!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது மாமனிதன்.
திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்தப்படம் சிறப்பான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இயக்குநர் சீனு ராமசாமி கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் நீண்ட நாட்களாக தள்ளிப் போனது.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. கடந்த மாதத்தில்தான் இவர் வில்லனாக மிரட்டிய விக்ரம் படம் ரிலீசானது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாமனிதன் படம் ரிலீசாகியுள்ளது.

சிறப்பான கேரக்டரில் விஜய் சேதுபதி
இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் காயத்ரி. இவர்கள் இருவருமே விக்ரம் படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் இவர்களின் படங்கள் ரிலீசாகியுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

4வது படத்தில் கூட்டணி
சீனு ராமசாமி இயக்கத்தில் இதுவரை மாமனிதன் படத்துடன் சேர்த்து நான்கு படங்களில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தென்மேற்கு பருவக்காற்று, இடம்பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை படங்களில் நடித்திருந்தார். இந்த நான்கு படங்களுமே விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கப்பட்டுள்ள படங்களாக மாறியுள்ளன.

சீனு ராமசாமியின் இடிமுழக்கம்
இந்தப் படத்தை தொடர்ந்து சீனு ராமசாமியின் இடிமுழக்கம் படம் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ளது. விரைவில் இந்தப் படமும் ரிலீசாக உள்ளது.இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனு ராமசாமியின் படங்கள் அழுத்தமான கதாபாத்திரங்களை வைத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்தப் படமும் வித்தியாசமான கோணத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விக்ரம் படத்துடன் போட்டி
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள மாமனிதன் படம் சிறப்பான விமர்சனங்களுடன் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது. படம் தற்போது கமலின் விக்ரம், சுந்தர் சியின் பட்டாம்பூச்சி, அசோக் செல்வனின் வேழம் ஆகிய படங்களுடன் திரையரங்குகளில் மோதி வருகிறது.

கூல் சுரேஷ் விமர்சனம்
ஆனாலும் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் இந்தப் படம் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிலேயே தங்கிய நடிகர் கூல் சுரேஷ், படம்குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். காலை வேளையில் இந்தப் பேட்டி நடத்தப்பட்ட நிலையில், பல் விளக்கிக் கொண்டே இந்த பேட்டியை அவர் அளித்துள்ளார்.

கருப்பு கமல்ஹாசன் என பாராட்டு
இந்த பேட்டியின்போது விஜய் சேதுபதியை கருப்பு கமல்ஹாசன் என்று அவர் பாராட்டினார். மேலும் அவர் உண்மையிலேயே மாமனிதன் தான் என்றும் பாராட்டித் தள்ளினார். இடையிடையில் பல் துலக்கவும் மறக்கவில்லை. இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்தது. இரண்டு நிமிடங்கள் பல் துலக்கிவிட்டே பேட்டியை கொடுத்திருக்கலாம் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியவில்லை.

தான் மாமா மனிதன் என பாராட்டு
மேலும் மாமனிதன் படம் அருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தை தயாரித்துள்ள ஆர்கே சுரேஷ் ஒரு மாமனிதன் என்றும் இயக்கிய சீனு ராமசாமி ஒரு மாமனிதன் என்றும் அவர் மேலும் பாராட்டினார். தொடர்ந்து இந்தப் படம் குறித்து விமர்சிக்கும் தான் ஒரு மா மாமனிதன் என்றும் பாராட்டிக் கொண்டார்.
Recommended Video

குருத்து எதுவும் இல்லை
அவரது இந்த அட்ராசிட்டியை பார்த்தவர்கள் சைடில் பல கமெண்ட்ஸ்களை கொடுத்தவண்ணம் இருந்தனர். தொடர்ந்து பேசிய அவர் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருப்பவை அனைத்தும் கருத்தே என்றும் குருத்து எதுவும் இல்லை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











