ராக்கெட்ரிக்கு வணக்கத்தை போடு.. மாதவனை நெகிழ வைத்த கூல் சுரேஷ்!

சென்னை : மாதவனின் ராக்கெட்ரி படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

Recommended Video

Rocketry Public Review | Madhavan | Suriya | ராக்கெட்ரி Review | *Review

இந்தப் படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார்.

படத்தில் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் மாதவன். படம் தற்போது சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விஞ்ஞானி நம்பி நாராயணன்

விஞ்ஞானி நம்பி நாராயணன்

நாட்டின் விண்வெளி வளர்ச்சிக்காக விகாஸ் என்ஜினை கண்டுபிடித்தவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். நாசாவில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு இஸ்ரோவிற்காக பணிபுரிந்தவர் நம்பி நாராயணன். திரவ எரிபொருளைக் கொண்டும் ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி.

இயக்குநராக அறிமுகம்

இயக்குநராக அறிமுகம்

விகாஸ் என்ஜினை கண்டுபிடித்த நிலையில், தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்படும் நம்பி நாராயணன், அதிலிருந்து மீண்டதை கதைக்களமாக கொண்டு கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாமல் இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளார் மாதவன். இந்தப் படத்தின்மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார்.

கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத படம்

கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத படம்

முதல் படத்திலேயே கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாமல் படத்தை எடுத்து தன்னை நிரூபித்துள்ளார். ஹீரோ மற்றும் இயக்குநர் என ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களையும் கையில் எடுத்துக் கொண்டு அதில் சாதித்துள்ளார். கிரியோஜெனிக் என்ஜின் தகவலை இந்தியாவிற்கு கொண்டுவரும் நம்பி நாராயணனின் முயற்சி மற்றும் அதைத் தொடர்ந்து அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சிறப்பாக ரசிகர்களுக்கு புரியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பான வசனங்கள்

சிறப்பான வசனங்கள்

மாதவனின் நடிப்பு மற்றும் இயக்கம் மட்டுமில்லாமல் வசனங்களும் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. தற்போது திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் மாதவனை நேருக்கு நேர் பார்த்து படத்தை பாராட்டியுள்ளார்.

 கூல் சுரேஷ் பாராட்டு

கூல் சுரேஷ் பாராட்டு

திரையரங்கிற்கு வந்த மாதவனை பார்த்து படம் சூப்பராக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார் மேலும் வெந்து தணிந்தது காடு, ராக்கெட்ரி படத்திற்கு வணக்கத்தை போடு என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து மாதவன் நெகிழ்வுடன் அவரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X