Cool Suresh: அந்த கருமத்த பண்ணாதீங்க.. விஜய் சேதுபதியிடம் கூல் சுரேஷ் கோரிக்கை!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை 2 படம் இன்றைய தினம் ரிலீசாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியான நிலையில் இந்த படத்தில் சூரி கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் மிரட்டியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கேமியோ கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவரது கேரக்டருக்கு தற்போது விடுதலை 2 படத்தில் முக்கியத்துவம் தரப்பட்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்துள்ள நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள விடுதலை 2 படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வரும் சூழலில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகுந்த பாராட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. படத்தில் வாத்தியார் என்று கேரக்டரில் விஜய் சேதுபதி மிரட்டி உள்ளதாக பாராட்டுக்கள் எழுந்துள்ளன.
நடிகர் விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி அடுத்தடுத்து தன்னுடைய படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக அவர் நடித்து வரும் சூழலில் ஒரே மாதிரியான கேரக்டர்களில் சிக்கிக் கொள்ளாமல் வித்தியாசமான கேரக்டர்கள் மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். பல ஆண்டுகளாக கேரக்டர், ஹீரோ ரோல்களில் மட்டுமில்லாமல் வில்லன் கேரக்டர்களிலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய் சேதுபதி, வாத்தியார் கேரக்டரில் விடுதலை 2 படத்தில் சிறப்பான நடிப்பை தொடர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு வணக்கத்த போடு: விடுதலை 2 படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியான சூழலில் அந்த படத்தில் சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் விஜய் சேதுபதி கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இதனிடையே, தற்போது வெளியாகியுள்ள விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்த நடிகர் கூல் சுரேஷ், வழக்கம்போல வெந்து தணிந்தது காடு, விஜய் சேதுபதிக்கு வணக்கத்தை போடு என்று முழங்கியுள்ளார். தான் பணம் வாங்கிக் கொண்டு இவ்வாறு பேசுவதாக அனைவரும் கூறுவதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய கூல் சுரேஷ் பக்கத்தில் இருந்த மற்ற ரசிகர்களையும் பேசவைத்து படம் குறித்த உண்மையான தகவலை வெளியிட்டுள்ளார்.
கருப்பு கமல்ஹாசன்: அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியை கருப்பு கமல்ஹாசன் என்று பாராட்டு தெரிவித்துள்ள ஸ்கூல் சுரேஷ், அவர் சர்வதேச அளவில் மிகப்பெரிய கலைஞனாக வலம்வந்து கொண்டிருப்பதாக பாராட்டியுள்ளார். மேலும் அவர் உலக நடிகனாக உள்ள நிலையில் பிக்பாஸ் போன்ற கருமத்தை ஏன் செய்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து படத்தின் மற்ற நடிகர்கள் சூரி, சேத்தன் உள்ளிட்டவர்களின் நடிப்பையும் வியந்து பாராட்டியுள்ளார். வெற்றிமாறன் பிறந்தவுடன் அவரது எதிர்காலம் தெரிந்ததால்தான் அவரது பெற்றோர் அவருக்கு வெற்றிமாறன் என்று பெயரிட்டுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











